பெண் கவிதை 40
ஆரன் மொத்தமாய் அவளிடம் கூறி முடிக்க அதை கேட்ட யட்சிணிக்கு மனம் கனத்து போனது அதிலும் தன் கணவன் வேறொரு பெண்ணுடன் ஊனாய் உருகி அவளுடன் காதலில் கசிந்துருக்கி வாழ்ந்துள்ளான் என்பதை காதால் கேட்க கேட்க அவளுக்கு மனம் ரணமாய் வலித்தது. கலங்கிய கண்களை மறைக்க பெரும் பாடு பட்டு மனதில் உள்ள ரணத்தின் விளைவால் வெளியே கேவலாய் வந்து அழுகையை கூட அடக்கிக் கொண்டு அமைதியாக நின்று இருந்தாள் யட்சிணி. ஆரன் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் "அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் காதலோட தான் இணைந்தோம் மாயா கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க தப்பு பண்றோம்னு எங்க மனசுல ஒரு துளி கூட என்ன வரவே இல்ல ஏன்னா நான் கண்டிப்பா அவளை கல்யாணம் பண்ணிக்குவேன் என்ற நம்பிக்கை எனக்கும் இருந்தது அவளுக்கும் இருந்தது. ஆனா அதுதான் அவளை கடைசியாக பார்க்க போற நாள்ன் தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா நான் அவளை விட்டுட்டு வந்து இருக்கவே மாட்டேன் என்கூடவே அவளை எங்க கூட்டிட்டு வந்து இருப்பேன் அதுதான் நான் பண்ண மிகப்பெரிய தப்பு" என்று கூறும் பொழுதே அவன் குரலில் வேதனை அப்பட்டமாய் வெளிப்பட்டது
"இவன்தான் உங்க பையனும் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?" என்று கேட்பதற்கு வேதனையாக இருந்தாலும் அவனிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் வருத்தத்துடன் கேட்க ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் தன் மகன் தன்னை எப்படி வந்து அடைந்தான் என்பதை அவளிடம் கூறத் துவங்கினான்
******************************
காலை வேளையில் யட்சிணியை காயபட்Uத்தி விட்டு கோபமாய் தன் அலுவலகத்திற்கு வந்த ஆரணுக்கு மனம் கொஞ்சமும் சமாதானம் ஆகவில்லை தன்னை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் தெரிந்து கொண்ட அனைத்து விடயங்களையும் தன் தந்தையிடம் கூற வேண்டும் என்பதற்காகவும் அவள் இவ்வளவு கீழ இறங்கி வேலை செய்துள்ளாள் என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டவன் அவள் மீது மேலும் மேலும் கோபத்தை வளர்த்துக் கொண்டான் அந்நேரம் தான் அவனின் இன்டர்காம் ஒலித்தது
அதை ஏற்று காதில் வைத்தவன் "கரிகால் ஆரன் ஸ்பீக்கிங்" என்றான் கணீர் குரலில். "சார் உங்களை பாக்குறதுக்காக ஒருத்தர் பூஞ்சோலை கிராமத்தில் இருந்து வந்திருக்காரு" என்று ரிசப்ஷனில் வேலை பார்க்கும் பெண் கூற பூஞ்சோலை என்ற பெயரை கேட்டவுடன் புருவம் சுருங்கியது ஆரனுக்கு. "வர சொல்லுங்க" என்று கூறியவன் அழைப்பை துண்டித்து விட்டு ஏதோ யோசனையாக அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அவன் அறை கதவு தட்டப்படவே "கம் இன்" என்று இவன் இறுகிய குரலில் அழைக்க அறைக்குள் நுழைந்தார் ஒரு வயது முதிர்ந்தவர். "யாரு நீங்க?"என்று இவன் கம்பீரமாக கேட்க "தம்பி வணக்கம் என்னோட பேரு ஞானபிரகாசம் உங்களை பாக்குறதுக்காக ஈசன் துணை ஆசிரமத்தில் இருந்து வந்து இருக்கேன்" என்றார் அவர். "சொல்லுங்க என்ன விஷயம்?" என்று அவன் கேட்க "ஒரு முக்கியமான விஷயமாக உங்க கிட்ட பேசணும் தம்பி" என்றார் அவர். "என்ன விஷயம்?" என்று இவன் கேட்க "தம்பி உங்களுக்கு நற்பவி பொண்ணை தெரியாம இருக்காதுனு நினைக்கிறேன்" என்றார் அவர் தயக்கத்துடன்
நற்பவி என்ற பெயரை கேட்டவுடன் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து வேகமாய் எழுந்தவன் "நற்பவிய பத்தி உங்களுக்கு எப்படி தெரியும் யார் நீங்க?" என்றான் ஆரன் அழுத்தமான குரலில். அவன் குரலில் கோபமும் இருந்ததை உணர்ந்து கொண்டவர் அவன் அருகே வந்தார் அமைதியாக அவர் என்ன பேசுகிறார் என்பதை கவனிக்க வேண்டும் என்று நின்று இருக்க அவன் கையில் ஏதோ ஒன்றை திணித்தார் அவர். "என்ன பண்றீங்க நீங்க?" என்று அவன் பின்னே நகர பார்க்க "புடிங்க தம்பி" என்று அவன் கையில் ஒரு மழலையை வைத்தார் அவர் . அது ஒரு குழந்தை என்பதை உணர்ந்து கொண்டவன் குழந்தையை கீழே விட்டுவிடக்கூடாது என்பதற்காக கவனமாக பிடித்திருந்தான் அந்த குழந்தையை தன் கையில் வாங்கிய நொடி உள்ளுக்குள் ஏதேதோ உணர்வு பொங்கியது அவனுக்கு.
சொல்ல முடியாத உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு அவன் தன் கையில் இருந்து மழலையின் முகத்தை இரும்பு கரம் கொண்டு வருட ஆரம்பிக்க அந்த மழலையோ வீறிட்டு அழுத்தவங்கியது புதியதாக ஒரு ஆணவனின் தொடுகையில். குழந்தையின் அழுகையில் பயந்து போனவன் "இந்த குழந்தையை புடிங்க எதுக்காக என்கிட்ட இந்த குழந்தையை கொடுத்து இருக்கீங்க? குழந்தை என்னிடம் வந்த உடனே அழுகுது என்கிட்ட இருந்த முதல்ல குழந்தையை வாங்குங்க" என்று மீண்டும் குழந்தையை அவர் கையில் திணிக்க முற்பட "உங்க குழந்தை தான் தம்பி இது" என்றார் அவர் அமைதியான குரலில்
அவர் கூறியதை கேட்டவனுக்கு உலகமே தன் இயக்கத்தை நிறுத்தி அது போல் ஆகியது. "வாட் ரப்பீஷ் என்ன பேசிட்டு இருக்கீங்க? என்னோட குழந்தையா?" என்று இவன் கோபமாய் கத்த அவனின் கத்தல் சுத்தத்தில் மேலும் குழந்தை அழுதது. அதில் ஒரு நொடி தன் கோபத்தை அடக்கி கொண்டவன் குழந்தையை தன் தோளில் சாய்த்து "ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லடா அழ கூடாது இனி கத்த மாட்டேன் சரியா அழ கூடாது" என்று இவன் குழந்தையை சமாதானம் செய்தவாறு அந்த பெரியவரின் புறம் திரும்பியவன் "என்ன உளறிட்டு இருக்கீங்க நற்பவிய தவிர நான் வேற யாரையும் என்னோட மனசுல இதுவரைக்கும் நினைச்சதே கிடையாது அப்படி இருக்கும்போது என்னோட குழந்தை இந்த குழந்தைனு என்ன சொல்றீங்க?" என்று இவன் கோபமாய் கத்த "உங்களுக்கும் நற்பவிக்கும் உங்களுக்கும் பிறந்த குழந்தைதான் தம்பி இந்த குழந்தை" என்றார் அவர்
அவர் கூறியதை கேட்டவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. "எ...ன்ன நீ எ...ன்ன சொல்...றீங்க நீங்க? என் நற்ம்..பவி இப்போ உயி....ரோடவே இ....ல்ல ஆனா நீங்க என....க்கு அவ...ளுக்கும் பிறந்த குழந்தை இ....துன்னு சொ...ல்றீங்...க?" என்று இவன் வார்த்தைகள் வராமல் திக்கி திணறிய குரலில் கேட்க "உங்க நற்பவி இறந்துட்டான்னு உங்களுக்கு யாரு சொன்னா தம்பி?" என்றார் அவர் அழுத்தமான குரலில். அதில் தான் காதால் கேட்ட செய்தி உண்மைதானா என்னும் நோக்கில் "அவ எங்கே இருக்கிறா?"என்று தேடினாம் கைகளை காற்றில் துழாவிய வண்ணம். அப்பொழுதுதான் அவன் கண் பார்வை இல்லாதவன் என்பதையே அறிந்தவர் "தம்பி உங்களுக்கு கண்ணு தெரியாதுங்களா?" என்றார் அவர் சங்கடமாக .
"அதை பற்றி இப்போ நீங்க கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என்னோட நவி எங்க இருக்கானு சொல்லுங்க. அப்ப உயிரோட இருக்கான்னு சொல்றீங்க அவள நான் இப்பவே பாக்கணும் தயவு செய்து கூட்டிட்டு போங்க" என்றான் இவன் ஆக்ரோஷமாக அதில் ஒரு கசந்து முறுவலை உதட்டில் வெளியிட்டவர் "உங்க நற்பவி உயிரோடு இருந்தா தம்பி ரெண்டு நாள் வரைக்கும் உயிரோட இருந்தா. ஆனா இன்னைக்கு இல்ல" என்றார் அவர் வேதனையாக அவர் கூறியதை கேட்டவன் மனம் நின்று துடித்தது
"என்ன என்ன சொல்றீங்க நீங்க ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் உயிரோட இருந்தாளா தயவு செஞ்சு ஏது சொல்றதா இருந்தாலும் இப்படி குழப்பமா சரியா சொல்லுங்க" என்று இவன் கோபமாய் கத்த அவன் கையில் இருந்து குழந்தையை வாங்கியவர் அங்கிருந்து சோபாவில் அவனை அமர வைத்துவிட்டு அவன் புறம் திரும்பினார். "ஆமாம் தம்பி நான் சொல்றது உண்மைதான் உங்களோட காதலி நற்பவி ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் உயிரோடு இருந்தா ஆனா இன்னைக்கு இல்ல அவ கடைசியா இறக்கும் போது சொன்னா இந்த குழந்தையை உங்ககிட்ட ஒப்படைக்க வேண்டும் என்று" என்று அவர் கூற தலையில் இறுக்க பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டான் அவன்
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை இவர் ஏதோ குழப்பம்வது போல் தோன்ற அமைதியாக அவர் என்ன கூறுகிறார் என்பதை கேட்க தொடங்கினான் அவன். அவரும் என்ன நடந்தது என்பதை விலாவாரியாக அவனிடம் எடுத்துரைக்க தொடங்கினார்
அன்றைய நாள் ஆரன் நற்பவியை விட்டு விடுமுறைக்காக தன் சொந்த ஊருக்கு கிளம்பும் நாள் நற்பவியும் அன்றே தன் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அதற்கு முன்பாக ஆரனை வழி அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக வந்திருந்தாள் ரயில் நிலையத்திற்கு. அவனும் அவளிடம் இருந்து பிரிய மனமே இல்லாமல் பிரிந்து தன் ஊரை நோக்கி பயணத்தை மேற்கொள்ள கலங்கிய கண்களுடன் அவன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவள் பின்பு தன் ஊருக்கு கிளம்புவதற்காக ஆயத்தம் ஆனாள். நற்பவியின் ஊர் ஒரு கிராமம் என்பதால் அங்கு அவ்வளவாக போக்குவரத்து வசதி இருக்காது. எப்பொழுதாவது செல்லும் பேருந்தில் தான் அவள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. தன் ஊர்க்கு வந்து இறங்கியவள் இன்னும் ஊர் மாறாமல் இருப்பதைக் கண்டு ஒரு சிரிப்பை உதட்டில் கொண்டு வந்தாள்
கிராமத்திற்குள் செல்லும் பாதையில் அவள் வயல்வெளிகளை ரசித்துப் பார்த்த வண்ணம் தன் உடமைகளுடன் நடந்து கொண்டிருக்க செல்லும் வழியில் இருந்தவர்கள் பாதிப்பேர் அவளை அடையாளம் காணாமல் அவளிடம் விசாரித்தனர் "யாரு கண்ணு நீயி ஊருக்கு புதுசா தெரியிர4 எந்த ஊரு உனக்கு? எதுக்காக இந்த ஊருக்கு வந்து இருக்க?" என்று ஒருவர் கேட்க "ஐயா என்ன தெரியலையா நான் தான் நற்பவி. நம்ம காமாட்சி பாட்டியோட பேத்தி" என்று அவள் கூற "எது காமாட்சியோட பேத்தியா யாத்தே நற்பவி புள்ளையா நீ? எம்புட்டு மாறிட்ட ஆளே அடையாளம் தெரியலையா ஆத்தா. பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள இப்படி மாறிபுட்டியே" என்று அவர் ஆச்சரியமாக கேட்க அவர் கூறியதை கேட்டு சிறு சிரிப்பை சிந்தியவள் அவரிடம் நலம் விசாரித்து விட்டு மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தாள்
தெருவிற்குள் நுழைந்தவள் இருந்தவர்கள் தன்னை யார் என்று தெரியாமல் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறியவாறு தன் வீட்டை அடைந்தாள் ஊரை விட்டு சற்று ஒதுக்கப்புறமாக தான் அமைந்திருந்தது நற்பவி வீடு. அவளின் தந்தை நிலம் உள்ள இடத்திலேயே அவளது பாட்டி வீடு அமைத்துக் கொண்டார். அது ஒரு சாதாரண ஓட்டு வீடுதான் ஆனாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது அவள் வீட்டிற்கு நுழையும் போது தான் ஒரு பெண் வீட்டிலிருந்து வெளியே வந்தால்
(மக்களே இந்த பிளாஷ்பேக்கில் ஆரன் நற்பவிய விட்டுட்டு தன்னோட ஊருக்கு போனதுல இருந்து அவளோட வாழ்க்கையில என்ன நடந்ததுங்கிறது முழுசா எழுதி இருக்கேன் இந்த பிளாஷ் பேக் சின்னதா தான் இருக்கும் ஒரு ஐந்து யூடிக்குள்ள முடிஞ்சிடும்)
தொடரும்....
Comments
Post a Comment