பெண் கவிதை 56

விடியல் கரிகால் ஆரன் மற்றும் யட்சிணியின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் விடியலாக விடிந்தது. காலையில் அனைவரும் எழுந்து தங்கள் வேலைகளை செய்து கொண்டிருக்க யட்சிணி கீழே தன் அறையில் இருந்து கையில் தன் உடைமைகளுடன் வெளியே வந்தாள். அவளை கண்ட அனைவரும் அதிர்ந்து போயினர். கயல்விழி தன் கணவனுக்கு உணவு பரிமாறுவதற்காக அனைத்து உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்து டைனிங் டேபிளில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவள் யட்சிணியின் வருகையை கண்டு அதிர்ந்தவாறு அவள் அருகி சென்றாள்


"யட்சிணி என்னமா இது?" என்று அவள் அதிர்ச்சியாக கேட்க அவளை பார்த்து  விரக்தியாக ஒரு புன்னகையை உதட்டில் தவழவிட்ட பெண்ணவள் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த ஆரூரன் முன்பு சென்று நின்றாள் அவனோ அவளை தான் அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தன் பார்வையை மாற்றாமல். ஆனால் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கீழே குனிந்தவள் "நீங்க சொன்ன மாதிரி உங்க பையனா உங்க குடும்பத்தோட சேர்த்து வச்சிட்டேன் சார் இதுக்கு மேல எனக்கு இங்க எந்த வேலையும் கிடையாது நான் இங்கிருந்து போறேன்" என்று அவள் மெல்லிய குரலில் கூற அவள் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர் 


"ஹேய்  என்னடி பேசற வீட்ட விட்டு வெளியே போறேன்னு சொல்ற கல்யாணமான பொண்ணு பேசுற பேச்சா இதெல்லாம். உன்னோட வீடு இது தான்.  உன் புருஷன் கூட தான் இனிமே நீ இங்க இருக்கணும்" என்று தியூதா கோபமாய் கூற அவள் கூறியதை கேட்டு விரக்தியாக அவளை பார்த்தவள் "நான் எதுக்கு மேடம் இனிமே இங்க இருக்கணும்? நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்ததற்கான காரணம் அவரை உங்க எல்லாரோட சேர்த்து வைக்கணும்னு தான். அந்த எண்ணமே எனக்கு நிறைவேறிடுச்சு. இனிமே நான் எதுக்கு இங்க இறக்கணும் நான் வந்த வேலையை நான் சிறப்பா முடிச்சிட்டேன் அதனாலதான் என்னோட இடத்துக்கே திரும்பி போகலாம்னு இருக்கேன்" என்று அவள் சாதாரணமாக கூற அவள் கூறியதை கேட்டு அதிர்ந்து அவளை பார்த்தான் துரியன் 


தன் தங்கை போல் பாதித்தவனின் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க அவள் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பது அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது "லூசு மாதிரி பேசாத மா இதெல்லாம் தப்பான முடிவு எதுக்காக இப்படி எல்லாம் நீ பேசிகிட்டு இருக்க? கல்யாணம் 
என்பது சாதாரண விஷயம் நினைச்சுகிட்டு இருக்கியா நீ. முதல்ல உன் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு போய் உன்னோட ரூம்ல வை இந்த மாதிரி இன்னொரு தடவை நீ முட்டாள் தனமா பேசறது எனக்கு தெரிஞ்சது அறைஞ்சிடுவேன் பாத்துக்கோ" என்று துரியன் கோபமாய் கூற அவன் கூறியதைக் கேட்டு எந்த உணர்வையும் முகத்தில் காட்டிக் கொள்ளாத யட்சிணி "அண்ணா நான் உன்கிட்ட ஏற்கனவே தெளிவா எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் ஆனா உம் கிட்ட நான் சொல்லாம இருந்த விஷயம் ஒன்னு தான். அது ஆரன் சார அவர் பேமிலியோட சேர்ந்த பிறகு அவரை விட்டு பிரிஞ்சு போறதுதான் நான் எடுத்து இருந்த முடிவு. அதை உங்க யார்கிட்டயும் நான் இதுவரைக்கும் சொல்லல ஆனா இப்ப சொல்லிட்டேன் தயவு செஞ்சு என்னை யாரும் தடுக்காதீங்க ஆரன் சாருக்கு ஏற்றவ நான் கிடையாது அது மட்டும் இல்ல அவர் மனசுக்குள்ள அவரோட நற்பவிய மட்டும் தான் அவர் நினைச்சுக்கிட்டு இருக்காரு அப்படி இருக்கும்போது அவரால் எப்படி என்ன மனைவியை ஏத்துக்க முடியும் இப்டி  என்கூட சேர்ந்து வாழ முடியும் . கொஞ்சமாவது அவரோட நிலைமைல இருந்து நீங்க யோசிச்சு பாத்தீங்களா? அவரோட நிலைமை புரிஞ்சுகிட்டு அவரை அவர் விருப்பப்படி வாழ விடுங்க " என்று அவள் கூறும் பொழுதே "நான் என்ன பண்ணனும் எனக்கு தெரியும் மாய யட்சிணி நீ எனக்கு அதை பத்தி சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது" என்று கூறியவாறு படிகளில் தன் மகனை தன் கரங்களில் ஏந்தி கொண்டு கம்பீரமாய் கீழே இறங்கி வந்தான் ஆரன்


அவனின் குரல் கேட்டவுடன் தானாக அவலுடல் அப்போது இறுகியது நேற்றைய இரவு நடந்த நிகழ்வில்.

அவள் எந்த பதிலும் அவனுக்கு கூறாமல் அமைதியாக நின்று இருக்க அவள் அருகே வந்து நின்றவன் "இப்ப எதுக்காக நீ இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றான் அவளிடம் அழுத்தமான குரலில். அவளோ அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக நின்று இருக்க "இப்படி அமைதியாக இருந்தா என்ன அர்த்தம் யட்சிணி வாயைத் திறந்து பதில் சொல்லு அதான் கேக்குறாருல்ல வாயை திறந்து பதில் சொல்லு எதுக்காக நீ இப்படி எல்லாம் இப்போ லூசுத்தனமா பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொல்லு" என்று துரியன் கத்த  "துரியம் கொஞ்சம் அமைதியா இருங்க அக்கா எதனால் இப்படி பண்றாங்கன்னு நம்மளுக்கு எதுவும் தெரியாது பொறுமையா பேசுவோமே" என்று விருஷாலி அவனை ஒரு புறம் அடக்க மான்வித்ரா "இங்க பாருமா இப்போ நீ தனியாள் கிடையாது இந்த வீட்டோட மருமக. இந்த மாதிரி நீ எடுத்து கவுத்தோம்ன்னு ஒரு முடிவு எடுப்பது ரொம்ப தப்பு. முதல்ல உங்க கல்யாணத்துக்கான காரணமாக நீ சொன்னதே தப்பான விஷயம் தான். ஒரு மருமகளா இந்த வீட்ல இருக்குற எல்லாரையும் நீ ஒன்றாக சேர்த்து வைக்கணும்னு நினைச்சது தப்பு கிடையாது ஆனா இப்படி எங்க ஆரனை எங்க கூட சேர்த்து வைத்த பிறகு அவனை விட்டுட்டு போறேன்னு சொல்ற பாத்தியா இதுதான் தப்பு" என்று மான்வித்ரா ஒரு புறம் கூற "கொஞ்சமாவது நீ கர்ணனை பத்தி யோசிச்சியா அவன் அம்மா அம்மான்னு உன்ன தான் சுத்தி வரான். அவனோட உலகமே ரொம்ப சின்னது அதுல அப்பாவா ஆரன் இருக்கான் அம்மாவா நீ இருக்க அவன் எங்க யார்கிட்டயும் கூட அவ்வளவோ ஒட்றது இல்ல. உங்க ரெண்டு பேர் கிட்ட தான் அவன் நெருக்கமா இருக்கான் அப்படி இருக்கும்போது குழந்தையோட மனசு நீ காயப்படுத்திட்டு அவன விட்டு விலகி போக போறியே உன்னோட விலக்கலாள அவனோட மனசு எவ்வளவு பாதிக்கும்னு  யோசிச்சியா?" என்று யஷ்வியும் கூறினாள் 


அவளிடம் ஆனால் அவர்கள் பேசுவதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதே யட்சிணி தன் பிடியில் நிற்க ஆருரன் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றான் இப்பொழுது அவன் என்ன பேசுவான் என்று அனைவரும் அவன் முகத்தை பார்க்க "இதுதான் உன்னுடைய முடிவா யட்சிணி?" என்றான் அழுத்தமான குரலில் ஆரூரன். அதற்கு அவள் ஆம் என்று தலையை மட்டும் அசைத்தாள் தலையை குனிந்து கொண்டு. 

ஆரன் கையில் இருந்த கர்ணனோ யட்சிணி இடம் தவம் முயற்சி செய்து கொண்டிருக்க குழந்தையை தூக்க பரபரத்த கையை அடக்கி கொண்டு கண்ணீருடன் நின்று இருந்தாள் மங்கை 

ஆரன் ஆனால் கர்ணனை தன் பிடியில் இறுக்கமாய் வைத்துக் கொண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருக்க தன் தந்தை தன்னை விடவில்லை என்றதும் வீறிட்டு அழ ஆரம்பித்தான் சத்தமான குரலில். குழந்தையின் அழுகுரலில் அனைவரும் பதறிப் போயினர் "டேய் இப்டி பண்ணாத அவன் அழுக்குறான் பாரு தயவு செஞ்சு அவகிட்ட குழந்தையை கொடு இப்படி பண்ணாத கரிகாலா" என்று கயல்விழி ஒருபுறம் அழுகையுடன் கூற அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை ஆனவன். "எதுக்கு ம்மா அவகிட்ட இவனை கொடுக்கணும் அதான் என் புள்ளையை வேணாம்னு சொல்லிட்டு தான அவ அவன உதறி தள்ளிட்டு போறா இந்த மாதிரி ஒருத்தி கிட்ட என் பிள்ளையை கொடுப்பதற்கு எனக்கு விருப்பமில்லை இனிமே அவனுக்கு அப்பாவா நான் மட்டும் இருந்துக்கிறேன் அவனை நானே இனிமே வளர்த்துக்கிறேன் யாரும் பொய்யான பாசத்தை காட்டி என் பிள்ளைய ஏமாற்ற வேண்டிய அவசியம் இனிமே கிடையாது " என்று வார்த்தைகளில் விஷத்தை தடவி அவள் நெஞ்சில் இறக்கினான் 


அவன் கூறிய வார்த்தையின் வீரியம் தாங்க  இயலாமல் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தாள்  கண்ணீருடன் யட்சிணி. "என் தாய் பாசத்தை வேஷம் என்கிறானா? என்னுடைய உண்மையான அன்பை பொய் என்கிறானா?" என்று அவள் அதுக்குள் நினைத்தவாறு கதறி அழுது கொண்டிருக்க தஷிகா அவளை ஓடி சென்று அரவணைத்துக் கொண்டவள் "ப்ளீஸ் அண்ணா இனிமே இப்படி பேசாதே இவ்ளோ நாள் அவங்க கர்ணனை எப்படி பார்த்துக்கிட்டாங்கன்னு நம்மளுக்கு நல்லா தெரியும் இப்படி வார்த்தையால அவங்களை வதைக்காத" என்று அவள் கண்ணீருடன் கூற அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை ஆரன்


ஆனால்  நேற்று தான் அவளிடம் நடந்து கொண்டதால்தான் இப்படி ஒரு முடிவை அவள் எடுத்து இருக்கிறாள் என்று நன்றாக புரிந்தது அவனுக்கு. தானே விலகிச் செல்கிறேன் என்று கூறுபவளை இழுத்து வைக்க அவனுக்கு. விருப்பமில்லை என்பதனால் தான் அவள் விருப்பத்திற்கு விட்டு விட்டான் ஆனவன். அவன் மனதிற்குள் நற்பவியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது இவளுடன் வாழ முடியாது என்ற எண்ணம் ஆணிவேராய் வேரூன்று இருந்தது அப்படி இருக்கும்போது இச்சிறு பெண்ணின் வாழ்க்கையை அழிக்க அவனுக்கு விருப்பமில்லை அதனால் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தான் ஆனவன்.

துரியன் அதற்கு மேல் யட்சிணியின் அழுகையை காண முடியாமல் அவள் அருகே சென்று அவளை தூக்கி நிறுத்தியவன் "அதான் முடிவு எடுத்துட்டல இனி எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் இனி உன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னு இருந்தா அது யாராலும் மாற்ற முடியாது உனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிட்ட இதுக்கு மேல நான் எதுவும் பேச விரும்பல வா போகலாம்" என்று அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முற்பட அவனை அனைவரும் தடுத்த முயற்சித்தனர் ஆனால் யாரின் பேச்சையும் கேட்கவில்லை அவன் 


"தயவு செஞ்சு யாரும் எதுவும் சொல்லாதீங்க இவளோட முட்டாள் தனத்துனால  தான் இன்னிக்கு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கா உங்க வீட்டுக்கு இவ மருமகளா இருக்குறதுக்கு தகுதி இல்லாதவ. இந்த மாதிரி ஒரு முட்டாள பத்தி நீங்க யோசிக்காதீங்க நீங்க எல்லாம் நல்லவங்க நீங்க நல்லா இருக்கணும் நான் இவள கூட்டிட்டு போறேன்" என்று அவன் கதறி அழுது கொண்டிருந்த யட்சிணியை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர முற்பட அவள் செவியில் வந்து தீண்டியது ஒரு பிஞ்சு குரல் "ம்..மா" என்று

அந்த சத்தத்தில் அவள் திகைத்து அப்படியே நிற்க அந்த பிஞ்சு சத்தம் கேட்ட அனைவரும் நிசப்தம் ஆயினர் அதிர்ச்சியாக. துரியன் கூட அப்படியே அதிர்ச்சியாக நின்றவன் திரும்பி தன் தங்கையை பார்க்க அவளோ கண்களில் கண்ணீருடன் தன் அண்ணனை நிமிர்ந்து பார்த்தவள் அப்படியே தன் பார்வையை பின்னே திருப்ப அங்கு ஆரன் கரங்களில் அழுது கொண்டிருந்தான் ஆரனின் புதல்வன் சூர்யகர்ணன்.  மீண்டும் அவன் பிஞ்சு குரல் அவளை அழைத்தது "ம்...மா..." என்று. அதில் யட்சிணியின் இதயம் நின்று துடித்தது ஒரு நொடி.


தொடரும்...


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....