பெண் கவிதை 63
ஞானபிரகாசத்தின் ஆசிரமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு குடிலின் வெளியே இருந்த கல்லில் அமர்ந்து இருந்தான் ஆரன் அந்த இரவு வேளையில் குளுமை காற்று உடலை துளைக்காத வகையில் நெருப்பு மூட்டப்பட்டிருந்தது கட்டைகள் அடுக்கி அவன் முன்பு. சுற்றிலும் அவனை அனல் காற்று தழுவி இருக்கு அதற்கு மேல் அவன் நெஞ்சம் அனலில் இட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தது .
அங்கு ஆசிரமத்தில் இருந்தவர்கள் ஒன்று குடிசையிலான வீட்டில் இருப்பார்கள் அல்லது இதுபோன்ற குடிலில் தான் இருப்பார்கள் அந்த ஆசிரமம் முழுவதும் ஞான பிரகாசத்தில் தலைமையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது அவர்களின் முக்கிய வேலையே மூலிகை மருந்துகள் தயாரித்து அதன் மூலம் உடல் உபாதைகளை தடுப்பதே ஆகும் அமைதியாக அந்த கல்லில் அமர்ந்து நற்பவியின் நினைவுகளில் மூழ்கியிருந்தான். எப்படி எல்லாம் காதலித்தோம் அதுவும் அன்று இரவு இருவரும் உடலால் மட்டும் இன்றி மனதால் தங்கள் காதலை பரிமாறிக் கொண்டதில் இப்பொழுதும் நினைவிற்கு வந்தது ஆரனுக்கு அதில் அவன் கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்க்க அவன் இதழ்களோ விரக்தியில் புன்னகைத்தது அந்நேரம் அவன் கண்ணீரை துடைத்து விட்டது ஒரு மென்மையான கரம் அந்த கருத்திற்கு சொந்தக்காரி யார் என்பதை அறிந்தவன் அந்த கரத்தை பிடித்து தன் கன்னத்தில் ஒட்டிக்கொண்டு அப்படியே தலை குனிந்து அமர்ந்தான்
அவன் அருகே உறங்கிக் கொண்டிருந்த கர்ணனை தன் நெஞ்சோடு அணைத்த வண்ணம் அமர்ந்தாள் யட்சிணி மெதுவாக அவனை தன் மடியில் சாய்த்து கொண்டவள் "நற்பவி அக்கா நம்மளை சுத்தி தான் எப்பவும் இருப்பாங்கன்னு நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேன் சார் அதை ஏன் நீங்க ஏத்துக்க மாட்டேங்கிறீங்க அவங்கள நீங்க உருவத்தலால பார்க்க முடியாது ஆனால் அவங்க உணர்வால உங்க மனசு முழுக்க பரவி இருக்காங்க அது எப்பவும் அழியாது நீங்க அழுவதை பார்த்தா அவங்க ஆத்மாவும் சார் கஷ்டப்படும் இப்ப கூட அவங்க இங்கதான் எங்கேயாவது இருந்து நம்மள பாத்துக்கிட்டே இருப்பாங்க நீங்க அழுதா அவங்க மனசு எவ்வளவு புண்படும்ம். காலைல ஞான பிரகாசம் ஐயா சொன்ன மாதிரி இறந்த பிறகும் அவங்களோட ஆத்மாவ நம்ம காயப்படுத்தனுமா உங்களுக்காக இப்போ கர்ணன் இருக்கான் அவனை பத்தி யோசிங்க சார் நீங்க அழுதத பார்த்து அவனுமே காலையிலிருந்து ஒரு மாதிரி தான் முகத்தை வச்சுக்கிட்டு இருக்கான் உங்களோட ஒவ்வொரு செய்கையும் குழந்தையோட மனசை பாதிக்கும் ப்ளீஸ் சார் கொஞ்சம் கொஞ்சமா உங்களோட மனசு தேத்திக்க முயற்சி பண்ணுங்க" என்று மென்மையாக அவன் தலையை கோதிவிட்ட வண்ணம் அவள் பேச அவனோ எந்த பதிலும் கூறாமல் அவள் மடியில் முகம் புதைத்து அமைதியாக படுத்திருந்தான்
அவனிடமிருந்து பதில் வராமல் போகவே ஒரு பெருமூச்சியை விட்டவள் தன் மெல்லிய காணக் குரலால் பாடத் துவங்கினால் எப்பொழுதும் அவனுக்காக பாடும் பாட்டை
🎼🎼🎼🎼எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை போகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்
என் ராஜாபையன் நீ அழுதால்
அதில் யானம் மிஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கண்ணம் நான் ஆகும்
எந்தப்பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது
எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான்
உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நதி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்தக்காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ… 🎼🎼🎼🎼🎼
அதற்கு மேல் அவள் கண்களை கண்ணீர் நிறைக்க பாடியதை நிறுத்தியவள் தூக்கத்தில் சிணுங்கிய கர்ணனை தட்டிக் கொடுத்தவாறு கீழே குனிந்து ஆரன் முகத்தை நோக்க அவன் கண்ணீர் அவள் மடியை நிறைத்திருந்தது. அதில் மனம் வெதும்பி போனது அவளுக்கு.
அமைதியாக அவன் பின் கழுத்தில் முகம் புதைத்து அவள் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்ட ஆரன் மெலிதாக அசைய அதில் அவன் மீது இருந்து எழுந்தாள் யட்சிணி தானும் அவள் மடியில் இருந்து எழுந்தவன் தன் முகத்தை ஒரு முறை அழுந்த துடைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த கர்ணனை வாங்கினான். அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன்" உள்ள போலாமா மாயா? ரொம்ப ஜில்லுனு காத்தடிக்குது இதுக்கு மேல இங்க இருந்தா நம்மளுக்கு உடம்பு சரியில்லாம போயிடும்" என்று எப்பொழுதும் போல் இரும்பு குரலில் கூறிவிட்டு அங்கிருந்து நகர அவன் ஒரு அளவு சரியாகி விட்டான் என்பதை உணர்ந்து கொண்டவள் குடிலுக்குள் நுழைந்தாள் அங்கு கட்டில் எல்லாம் இல்லை வெறும் ஒரு உடலை உறுத்தாத செடி நார்களின் உதவியால் ஒரு சிறிய படுக்கை செய்யப்பட்டிருக்க அதன் மீது கம்பலமும் விரிக்கப்பட்டிருந்தது. தட்டு தடுமாறி ஓரளவு இருக்கு அந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு குழந்தையுடன் நகர்ந்து ஆரன் கர்ணனை படுக்கையில் கிடைத்து விட்டு ஒரு ஓரமாக அவனும் படுத்துக் கொண்டான் யட்சிணியும் எதுவும் பேசவில்லை அமைதியாக சென்று படுக்கையில் விழுந்தவள் கர்ணனை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மெல்ல விழிகளை மூடினால் ஆனால் இருவருக்கும் உறக்கம் தான் எட்டா கனியை போய்விட்டது அன்று இரவு
மறுநாள் காலையில் ஞானப்பிரகாசம் அவர்களை சந்திக்க வந்தவர் "உங்ககிட்ட நற்பவி எப்படி இருந்தாங்கிறது மட்டும்தான் தம்பி சொன்னேன் ஆனா அவளை அடக்கம் பண்ண இடத்தை அடுத்த உங்ககிட்ட நான் காட்டல அது எனக்கு மனசுக்குள்ள ஒரு நெருடலாக இருந்தது அதனாலதான் அதை உங்களுக்கு காட்டணும்னு சொல்லி இங்க வர வச்ச" என்று அவர் ஆரன் நிலை உணர்ந்து கவலையுடன் கூற அதில் ஒரு முறை தன் தொண்டையை செரும்பி கொண்டவன் ஒரு காசோலையை எடுத்து அவர் முன்பு நீட்டினான். அதை புரியாமல் அவர் பார்க்க "என்னால முடிஞ்ச இதுதான் ய்யா என் நவியை நீங்க பத்திரமா பாத்துக்கிட்டிங்க அதுக்காக என்னால கொடுக்க முடிஞ்சது இது மட்டும் தான் இத வச்சு ஆசிரமத்தை இன்னும் நல்லா பராமரிங்க இனிமே எந்த உதவினாலும் என்கிட்ட போன் பண்ணுங்க அத நான் உதவினு சொல்லக்கூடாது என்னோட கடமை இனிமே எந்த ஆசிரமம் முழுக்க என்னோட பொறுப்பு" என்று ஆரன் கூற "பண உதவி எல்லாம் வேண்டாம் தம்பி" என்றார்
அவர் தயக்கத்தை உணர்ந்து "மாயா இங்க வா மா" என்று கர்ணனுடன் ஓரமாக நின்று இருந்தவளை அழைக்க அவன் அருகே வந்து நின்றாள் யட்சிணி "இது அவர் கையில் கொடு மா" என்று அவன் யட்சிணியின் கரத்தில் காசோலையை திணிக்க அதை அவனிடமிருந்து வாங்கி தயக்கத்துடன் நின்றிருந்த ஞான பிரகாசத்தில் கையை உரிமையாக பிடித்து அதில் காசோலையை வைத்தவள் "இது நீங்க நவி அக்காவை பார்த்துக் கொண்டதுக்காக கொடுறது இல்லை என்ன நீங்க அதை ஒரு கடமையா நினைச்சு இருந்தீங்கன்னா சாதாரணமாக விட்டு இருப்பீங்க ஆனா நீங்க அவங்கள உங்க பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டிங்க அதுக்காக இந்த பணத்தை நாங்க கொடுக்கிறோம்னு தயவு செஞ்சு நினைக்காதீங்க இது ஆசிரமத்தை இன்னும் நல்லா பராமரிக்கத்துக்காக தான் நாங்க கொடுக்கிறோம் " என்று அவள் அவர் மனதை புரிந்து கொண்டது போல் கூற அதில் நெகிழ்ச்சியாக அவளை பார்த்தவர் "நெஜமாவே எனக்கு நீ நினைக்கிற மாதிரி எண்ணம் தான்மா இருந்தது தம்பி நான் காசுக்காக தான் இந்த வேலையை செஞ்ச மாதிரி கொடுக்கிறார் என்று எனக்கே ஒரு நிமிஷம் தோணுச்சு. ஆனா இப்பதான் என் மனசு நிம்மதியா இருக்கு இங்க இருக்கிற நிறைய பேரு வயது முதிர்ந்தவங்க தான் அவங்களுக்கு இந்த காசு கண்டிப்பா பயன்படும்" என்று ஞான பிரகாசம் கூற அதை சிரிப்புடன் ஏற்றவள் ஆரன் அருகே சென்று அவன் காதில் ஏதோ கூற அதைக் கேட்டவன் சரி என்று தலை அசைத்து விட்டு அவளுடன் வந்து ஞான பிரகாசத்தின் முன்பு நின்றான் அவர் புரியாமல் அவர்கள் இருவரையும் பார்க்க ஆரன் யட்சிணி தம்பதிகளாக மட்டுமின்றி தங்கள் பிள்ளை கர்ணனுடன் சேர்ந்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க இதை சற்றும் எதிர்பாராத ஞான பிரகாசம் முதலில் பதறிப் போனவர் பின்பு இருவரையும் மனதாக ஆசீர்வதித்தார்
பின்பு துரியன் தனிப்பட்ட முறையில் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவன் தன் பங்கிற்கு தன்னால் முடிந்த பணத்தையும் அவரிடம் வழங்க "உன்னால முடியலனாலும் முடிஞ்சத செய்யணும் நினைக்கிற பாத்தியா இந்த மனசுக்கு நீயும் மனைவி பிள்ளைகளோட சந்தோஷமா வாழ்வ பா" என்றார் அவர் மகிழ்ச்சியுடன். "எனக்கு இனிமேதான் ஐயா கல்யாணம் ஆகப்போகுது அதனால என் கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரணும் நான் உங்களை நேரில் வந்து அழைப்பேன்" என்று துரியன் கூற "தஷிகா யுதி கல்யாணத்துக்கு கண்டிப்பா நேர்ல வந்து இன்வைட் பண்ணும் போது உன்னோட கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலாம் துரியா" என்றான் ஆரன் சரி என்று மகிழ்ச்சியுடன் தலை அசைத்தான் அவன்
பின்பு அனைவரும் அங்கிருந்து கிளம்ப துரியன் கர்ணனை தூக்கிக்கொண்டு முன்னே சென்று விட அவன் பின்னே சென்று விட்டாள் அவரிடம் இருந்து விடைபெற்று யட்சிணி . ஆரன் ஞானப்பிரகாசத்திடம் கூறிக்கொண்டு கிளம்ப முற்பட "ஒரு நிமிஷம் தம்பி" என்று அவனை இடை நிறுத்தினார் ஞானப்பிரகாசம். அதில் அவர் புறம் திரும்பியவன் "என்ன ஐயா சொல்லுங்க?" என்றான் இவன் எப்பொழுது போல். அதில் அவனை தயக்கத்துடன் பார்த்தவர் "உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும் பா அதனாலதான் உங்களை கூப்பிட்டேன்" என்று அவர் கூற அவரின் முகத்தை புரியாமல் பார்த்தான் ஆரன்.
தொடரும்...
Comments
Post a Comment