பெண் கவிதை 61
ஞானப்பிரகாசம் ஆசிரமத்தின் வெளியே வாசலிலே வந்து யட்சிணி ஆரன் மற்றும் துரியன் மூவரையும் வரவேற்றார் யட்சிணியின் கரங்களில் அமர்ந்து தன்னையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த கர்ணனை பார்த்தவுடன் அவன் மீது உள்ள பாசம் பொங்கி வழியே அவரின் நிலை உணர்ந்து யட்சிணியும் அவர் கரத்தில் கர்ணனை கொடுத்தாள். அவன் தன் கைவந்து சேர்ந்தவுடன் அவன் கண்ணம் கண்ணமாய் முத்தம் வைத்து கொஞ்சி தள்ளிவிட்டார் ஞானபிரகாசம் . குழந்தையும் அவரோடு நன்றாக ஒன்றி கொண்டான் அவருடனே அவ்வளவு நாட்கள் இருந்ததால் எளிதில் அவரிடம் ஒன்ற முடிந்தது அவனால்.
"தங்கம் ராஜா எப்படிடா இருக்க அப்பு? உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆகுது இந்த தாத்தாவை மறந்துட்டியா? என்ன பத்தி உனக்கு ஞாபகம் இல்லையா?" என்று கண்களில் ஓரம் துளித்த கண்ணீருடன் அவன் முகத்தை தடவியவாறு அவர் நெகிழ்ந்து பேச அவர் கழுத்தை கட்டிக்கொண்டு அமைதியாக அவர் தோளில் சாய்ந்து விட்டான் கர்ணன். அவனின் அணைப்பில் தன் மனம் துயர் சற்று தகர்த்தெறிந்தவர் "வாங்க தம்பி வாமா உள்ள வாங்க எல்லாரும்" என்று அவர்களை உபசரித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
ஆரனுக்கு அந்த இடத்திற்குள் நுழையும் பொழுது நற்பவியின் வாசம் நாசிக்குள் ஏறியது போல் தோன்ற சட்டென்று கண்கள் கலங்குவது போல் ஆனது அவனுக்கு. நெஞ்சத்தை ஏதோ அழுத்தி பிடிப்பது போல் உணர்வுகள் அவனுக்கு தோன்ற ஆரம்பிக்க தன் நெஞ்சை அழுத்தமாக தடவிக் கொண்டவன் அப்படியே நின்று விட்டான். ஞானபிரகாசம் துரியனுடன் பேசியவாறு அங்கிருந்து நகர்ந்துவிட அவர்களை சிரிப்புடன் பார்த்தவாரே ஆரனுடன் நடந்து கொண்டிருந்த யட்சினி அவன் நின்றவுடன் தானும் நின்றவள் அவனை புரியாமல் பார்க்க அவன் முகம் வியர்த்திருப்பதை கண்டு அதிர்ந்து போனாள். "என்ன ஆச்சுங்க ஏன் உங்க முகமெல்லாம் இப்டி இருக்கு. ஏன் நெஞ்ச படிச்சு இருக்கீங்க? நெஞ்சு வலிக்குதா என்ன? என்ன ஆச்சு?" என்று அவள் பதற்றத்துடன் கேட்க பெரிய பெரிய மூச்சுகளாக வாங்கியவாறு அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்து விட்டவன் தலையை இறுக பிடித்துக் கொண்டான். ஏனோ நற்பவியின் நினைவலைகள் அனைத்தும் அவனை சூழ்ந்து கொள்ள காதிற்குள் அவள் குரல் இப்பொழுதும் கேட்பது போல் தோன்றியது ஆணவனுக்கு
தலை முடியை இறுகு பிடித்துக் கொண்டு அவன் தலை குனிந்து அமர்ந்திருக்க அதில் பயந்து போனவள் அவன் முன்பு மட்டும் இட்ட அமர்ந்து "என்ன ஆச்சு சொல்லுங்க ஏதாவது உடம்புக்கு பண்ணுதா உடம்பு முடியலையா ஹாஸ்பிடல் போலாமா? இங்க பாருங்க என்ன பாருங்க" என்று அவன் முகத்தை பிடித்து பதட்டத்தில் நிமிர்த்தினாள் பெண் அவள். அவனை தொடுகிறோம் என்ற பயம் எல்லாம் அப்பொழுது அவளுக்கு இல்லை தன்னவனின் நிலை அவளுக்கு அபரிதமான பயத்தை கொடுத்து இருந்தது. ஆரன் வெகுநேரத்திற்கு பின்பு மெல்ல இதழ் பிரித்து பேச துவங்கினான் "என்னன்னு தெரியல மா ஒரு மாதிரி இருக்கு நெஞ்செல்லாம் பிசையுது நவி இங்கே என் கூடவே இருக்கிற மாதிரி தோணுது" என்று அவன் நெஞ்சை இறுக பிடித்துக் கொண்டு தலை குனிந்த வண்ணம் பேச அவன் வார்த்தைகளில் மனம் ரணமாய் வலித்தது அவளுக்கு
அதிலும் அவன் நவியின் நினைவலைகளில் துவண்டு போவதை பார்த்தவளுக்கு அவனை எண்ணி மேலும் கவலையாக இருந்தது "நற்பவி அக்கா இங்க தான கொஞ்ச நாள் இருந்தாங்க. அதனால் உங்களுக்கு இங்கே வந்த உடனே இப்படி தோணுது அவங்க கண்டிப்பா இங்க தாங்க இப்பவும் இருப்பாங்க நம்மள பாத்துக்கிட்டு தான் இருப்பாங்க நீங்க தயவு செஞ்சு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க அது உங்க உடம்புக்கு நல்லது இல்லை" என்று அவள் அவன் நெஞ்சை நீவிவிட்ட வண்ணம் பேச அவள் இரு கரங்களையும் பிடித்து அதில் முகம் புதைத்து அமைதியாக சிறிது நேரத்தை கழித்தான் ஆரன். துரியன் அவர்கள் வராமல் போகவே அவர்களை தேடி வந்தவன் இருவரும் இருந்த நிலை கண்டு பதறிப் போனான்
"என்ன ஆச்சு மா சார்க்கு என்ன ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்காரு என்ன பிரச்சனை?" என்று அதிர்ச்சியாக கேட்க ஞான பிரகாசமும் வந்தவர் ஆரன் நிலையை நன்றாக புரிந்து கொண்டார் "தம்பி தயவு செஞ்சு பழசு நினைக்காதீங்க இப்போ உங்களுக்குன்னு ஒரு மனைவி இருக்காங்க உங்க புள்ளையா இவன் இருக்கான் அதை பத்தி மட்டும் யோசிங்க நற்பவி எப்பவும் உங்க கூட தான் இருப்பா உங்களை பார்த்துகிட்டு தான் இருப்பா நீங்க இப்படி அவளை நினைத்து அழுகுறதை பார்க்கும்போது அவளுக்கே கஷ்டமா தான் இருக்கும் அவ ஆத்மாவை இறந்த பிறகும் கஷ்டப்படுத்தாதீங்க தம்பி" என்று அவர் கூற அதில் பெரு மொஇச்சை ஒன்றை விட்டு நிமிர்ந்தவன் யட்சிணியின் கரங்களை விடுத்து தன் முகத்தை ஒரு முறை அழுத்தமாய் துடைத்துக் கொண்டான்
ஒரு அளவிற்கு தன்னை சமன் செய்து கொண்டு தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன் "உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் ஐயா" என்றான் மெல்லிய குரலில் "சொல்லுங்க தம்பி என்ன கேட்கணும்?" என்று அவர் குழப்பமாய் கேட்க "அது... நவி இறந்த பிறகு அவளை என்ன பண்ணீங்க?" என்று திக்கித் திணறி கரகரத்த குரலில் அவன் கேட்டு விட அவனின் கேள்வியில் அனைவருக்கும் அவனை பார்க்கவே பாவமாக இருந்தது யட்சிணிக்கோ கண்களில் இருந்து கண்ணீரே வழிய துவங்கி விட்டது .அவன் கரத்தை அவள் மெல்ல பிடித்துக் கொள்ள தானும் பதிலுக்கு அவள் கரத்தை இறுக்கமாய் பிணைத்துக் கொண்டவன் ஞான பிரகாசத்தின் பதிலுக்காக காதை கூர்மையாய் தீட்டி வைத்திருந்தான்
அவனின் கேள்வியில் மனவலியுடன் அவளை பார்த்து ஞானபிரகாசம் "அதுக்காக தான் தம்பி உங்களை இங்கே கூப்பிட்டு இருக்கேன் இவ்வளவு நாள் எங்களுக்கு வசதி இல்லாததுனால எங்களால் இந்த விஷயத்தை பண்ண முடியல இப்பதான் எனக்கு அதுக்கான அளவு வசதி வந்தது இருக்கு. வாங்க போகலாம்" என்று கூறிவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் அவர்.
அவரின் பின்னே குழப்பமான முகத்துடன் அனைவரும் செல்ல யட்சிணியின் கரத்தை இறுக்க பிடித்துக் கொண்டு அவளுடன் நடந்தான் ஆரன். அங்கிருந்து ஒரு இடத்திற்கு வந்த ஞான பிரகாசம் "உங்க கேள்விக்கான பதில் இங்கதான் தம்பி இருக்கு வாங்க" என்று திரும்பி அவனை அழைக்க அங்கே இருந்ததை கண்டு அதிர்ந்து போயினர் யட்சிணி மற்றும் துரியன் ஆரனுக்கும் ஏனோ மனம் படபடவென்று அடித்துக் கொள்ள அதற்கு மேல் முடியாமல் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான் அங்கு அவன் முன்பு இருந்தது நற்பவியின் கல்லறை. யட்சிணிக்க அதற்கு மேல் அழுகையை அடக்க முடியாமல் வாயை பொத்தி அவள் அழுக ஆரம்பித்து விட துரியன் வேறு புறம் திரும்பி நின்று கொண்டான் தன் கவலையை மறைக்கும் விதமாக ஆரனுக்கு மனம் படபடவென்று அடித்துக் கொள்ள அழுது கொண்டிருந்த யட்சிணியை பிடித்து இழுத்து தன் அருகே அமர வைத்தவன் "மாயா எனக்கு என்னமோ மனசெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது டி இவர் எதுக்காக நம்மளை எங்க கூட்டிட்டு வந்திருக்காரு இங்க அப்படி என்னதான் இருக்கு சொல்லு மாயா" என்று அவன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கண்களின் ஓரம் துளிர் கண்ணீருடன் கரகரத்த குரலில் அவள் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தவாறு கேட்க அதில் கதறி அழுதாள் பெண்ணவள்
அவளின் அழுகை அவனுக்கு எதையோ உணர்த்த "பதில் சொல்லுடி என்ன தாண்டி இருக்கு இங்க நீ இப்படி அழுதுகிட்டே இருந்தா என்ன அர்த்தம்?" என்று அவள் கேட்க அவன் உரிமையாக அவளை டி என்று அழைக்கதை கூட அவள் கவனிக்கவில்லை மெல்ல அவன் கரத்தை பிடித்து கதறி அழுதவாறு அவன் முன்பு இருந்ததின் அவன் கரத்தை வைத்தாள் பெண் அவள். அதில் உடல் தூக்கி வாரி போட்டது ஆரனுக்கு. படாரென்று கரத்தை இழுத்துக்கொண்டு அப்படியே கீழே விழுந்தவன் "மாயாஆஆ" என்றான் சத்தமாக கதறலுடன். அதில் மேலும் கதறி அழுதவள் அவனை தன்னோடு இருக்குமாய் அணைத்துக்கொண்டு அவர்களின் முன்பு இருந்த நற்பவியின் கல்லறையின் மீது மீண்டும் அவன் கரத்தை வைத்தாள்
இப்பொழுது அந்த இடமே அதிரும் வகையில் வாய்விட்டே கதற ஆரம்பித்து விட்டான் ஆரன். அவனின் கதறல் சத்தம் அங்கிருந்து அனைத்து திசைகளிலும் எதிரொலிக்க ஆத்மாவாய் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நற்பவி கூட கண்ணீர் சிந்தினாள் தன்னவனின் கதறலில். "ஆமாங்க நம்ம முன்னாடி இருக்கிறது நற்பவி அக்காவோட கல்லறை தான் அதுக்கு தான் ஞானப்பிரகாசம் ஐயா நம்மளை கூட்டிட்டு வந்திருக்காரு" என்று அவள் அழுகையுடன் கூற அதற்கு மேல் முடியாமல் அப்படியே தவழ்ந்து சென்று காற்றில் துழாவி நற்பவியின் கல்லறையை கண்டுபிடித்து அதன் மீது சாய்ந்து படுத்த ஆரன் வானையே உலுக்கும் வகையில் கதற ஆரம்பிக்க தன் தந்தையின் கதறல் சத்தத்தில் கர்ணன் கூட உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தான்
யட்சிணி ஆரனை சமாதானம் செய்வதா கர்ணனை சமாதானம் செய்வதால் என்று தெரியாமல் திணறியவள் அழுகையை அடக்கிய வண்ணம் கர்ணனை ஞான பிரகாசத்திடமிருந்து வாங்கி நிற்பவியின் கல்லறை மீது அமர வைத்தாள். அவனோ தவழ்ந்து சென்று கல்லறை மீது படுத்து அழுது கொண்டிருந்த தன் தந்தையை பிடித்து இழுக்க அவனின் தொடுகையில் மேலும் கதறி அழுதவன் அவனை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்த வேண்டும் "நவி பாருடி நம்ம புள்ளய பாருடி நம்ப ரெண்டு பேரோட காதலிக்கு சாட்சியா பொறந்த நம்ம புள்ள இருக்கான் இவன பாருடி ஏன்டி இப்படி என்ன பாதியிலேயே விட்டுட்டு போன என்னை இப்படி பாதையில் விட்டுட்டு போறதுக்கு தான் என் மேல ஒளி நேசத்தை வச்சியா இப்படி என்னை வாழ்க்கை முழுக்க துடிதுடிக்க வைக்க தா என்ன அவ்வளவு காதலிச்சியா?" என்று இவன் கதறலுடன் கத்த யட்சிணி அப்படியே மண்டியிட்டு அவன் அருகே அமர்ந்தவள் அமைதியாக தலை குனிந்து கண்ணீர் சிந்தினாள்.
துரியனுக்கு கண்ணீர் சுரந்தது ஆரன் கதறலை கேட்டு. முதன்முதலாக ஆரன் அழுவதை பார்க்கிறான் அதிலும் அவன் வார்த்தைகளில் இருந்த ரணம் இவன் மனதை கலங்கடித்தது எந்த அளவிற்கு அந்த பெண்ணை நேசித்திருந்தால் இப்படி இவன் கதறுவான் என்று எண்ணும் பொழுதே உண்மையான இவவர்களின் காதல் அவனுக்கு நன்றாக புரிந்தது.
தொடரும்....
Comments
Post a Comment