பெண் கவிதை 60
குழந்தையின் குரல் கேட்ட ஆரனுக்கு கால்கள் தன் வலுவை இழந்தது போல் ஆக அப்படியே மண்டியிட்டு சோர்ந்து அமர்ந்து விட்டான். ஆனவன்
அவளின் நிலை உணர்ந்து வேகமாய் அவள் அருகே குழந்தையுடன் ஓடிய யட்சிணி அவனைத் தாங்கிக் கொண்டாள் . ஒரு தோழமையுடன் அவளை அணைத்துக் கொண்ட ஆரனுக்கு தன் மகனின் குரலை கேட்டு அதுவும் தன்னை அப்பா என்று அழைத்த மகனின் குரலை கேட்டு கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்தது. அவன் கண்ணீரை கண்டு இவளும் உள்ளுக்குள் வேதனை கொண்டவள் தன் கரம் கொண்டு அவன் கண்ணீரை துடைத்துவிட்டு "அழாதீங்க அவன் எவ்வளவு அழகா அப்பான்னு உங்கள கூப்பிடுறான் அவனை கொஞ்சரத விட்டுட்டு இப்படி அழுதுட்டு இருக்கீங்க" என்று அவள் அழுகையுடன் கூற அதில் தன்னிலை உணர்ந்தவன் அவளிடம் இருந்து விலகி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு காற்றில் கைகளை தூலாவி தன் மகனைத் தேட அவன் கரங்களுக்குள் புகுந்து கொண்டான் அவன் மகன் பாய்ந்து சென்று யட்சிணியிடம் இருந்து.
தன்னிடம் அடைக்கல புகுந்த தன் மகனை தன்னுடைய இறுக்குமாய் அனைத்து அவன் கண்ணம் கண்ணம்மாய் முத்தம் வைத்து விட்டான் . இதுவரை இவ்வளவு குழந்தைகளிடம் நெருக்கமாக அவன் இருந்ததில்லை இன்று ஏனோ அவன் குரலை கேட்ட பிறகு அவன் முகத்தை காண வேண்டும் என்று அவனுக்கு நெஞ்சம் துடியாய் துடிக்க தன் கரம் கொண்டு அவன் முகத்தை தடவியவனுக்கு மேலும் கண்ணீர் பெருகியது கண்களில். குழந்தையோ தன் பிஞ்சு கரம் கொண்டு அவன் தாடியை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருக்க அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு குழந்தையின் தோளில் முகம் பொதிந்து தன் கண்ணீரை மறைக்க முயன்றாம் ஆரன்
"அழனும்னு தோணுச்சுன்னா அழுதுடுங்க தயவு செஞ்சு இப்படி மறைக்காதீங்க என்கிட்ட மறைக்கிறதுக்கு இதுல என்ன இருக்கு நான் உங்களோட பெஸ்ட் பிரண்ட் அது மட்டும் இல்லாம நான் உங்களோட மனை..." என்று கூற வந்தவள் உடனே தன்னை நிதானப்படுத்திக் கொண்டு "என்கிட்ட தயவு செஞ்சு உங்க கண்ணீரை மறைக்காதீங்க அழணும்னு தோணுச்சுன்னா வாய்விட்டு அழுதுடுங்க மனசுக்குள்ள இவ்வளவு ரணத்தை வச்சுக்கிட்டு நீங்க உங்களோட கண்ணீரை மறைக்கணும்னு அவசியம் இல்லை" என்று அவள் கூறும் பொழுது கதறி அழுக ஆரம்பித்து விட்டான். அவனின் அழுகை சத்தம் இவளை உலுக்கியது தந்தை மகன் இருவரையும் விழி சிமிற்றாமல் கண்ணீருடன் அவள் பார்த்துக் கொண்டிருக்க குழந்தை தன் தந்தையின் அழுகையை கண்டு உதட்டை பிதுக்கினான். அவனும் அழுகையில் நேரம் செல்ல செல்ல அவன் விசும்பி அழ ஆரம்பிக்க தன் மகனின் அழுகை சத்தத்தில் தன் நிலைக்கு வந்த ஆறல் உடனே தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு "அப்பா அழல கண்ணா இங்க பாரு அப்பா அழல நீங்களும் அழக்கூடாது சரியா" என்று அவனை சமாதானம் செய்தான்
"ப்பா ப்பா" என்று மீண்டும் மீண்டும் உச்சரிக்க பழகிக் கொண்டிருந்தான் குழந்தை தந்தை முகத்தை தன் பிஞ்சு கரம் கொண்டு பிடித்துக் கொண்டு ஆசையாக . தன்மகனின் வார்த்தைகளில் மேலும் உள்ளம் நெகிழ்ந்தவன் "அப்பா தான் டா கண்ணா நான் உனக்கு அப்பா தான். என்னை அப்பான்னு கூப்பிடுறதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா அவள மட்டும் அம்மான்னு அன்னைக்கு கூப்பிட்டேன் ஆனா என்ன அப்பானு கூப்பிடனும்னு உனக்கு இன்னைக்கு தான் தோணுச்சா?" என்று அவன் குழந்தை இடமே செல்ல சண்டையிட அதைக் கேட்டு அழுகையிலும் சிரித்தவள் "உடனே என்னை குத்து சொல்லிடுவீங்களே அவனுக்கு அப்பான்னு பேசுறதுக்கு ட்ரெயினிங் கொடுத்துதே நான் தான். என்ன போய் நீங்க அவன்கிட்ட கம்ப்ளைன்ட் பண்றீங்க?" என்று இவன் பொய்யான கோபத்துடன் கூற அவள் கூறிய வார்த்தைகளில் நிகழ்ந்து போனவன் "தேங்க்ஸ் மாயா என் பையன பேச வச்சதுக்கு. உன் மூலமா தான் அவ பேச ஆரம்பித்தான். ரொம்ப சந்தோஷமா இருக்கு அதுவும் இன்னிக்கு அவன் என்னை அப்பானு கூப்பிட்டதுல எனக்கு தலைகால் புரியல இதுவரைக்கும் எந்த குழந்தையும் என்ன இப்படி உறவு முறை வைத்து கூப்பிட்டது இல்லை ஆனா என் புள்ள முத முதல்ல என்ன அப்பான்னு கூப்பிட்டு இருக்கான் எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ஆனால் இந்த நேரத்துல நவி இல்லாமல் போய்ட்டாளே மாயா" என்று தன் காதலியை நினைவில் ஆரன் கரகரத்த குரலில் கூற அதை கேட்ட பெண்ணவளுக்கு மேலும் மனம் வருந்தியது
நற்பவியை நினைத்து
அவளைப் பற்றி இவள் இப்பொழுது பேசுகிறானே என்று அவள் மீது இவன் கோபம் கொள்ளவில்லை அவள் இந்நேரம் இல்லாமல் போய்விட்டாளே என்று கவலை தான் கொண்டாள் மனதிற்குள்
"விடுங்க சார் உங்க நவி உங்க கூட உணர்வால சூழ்ந்து இருப்பாங்க இப்ப கூட இதை எல்லாத்தையும் அவங்க பார்த்துகிட்டு தான் இருப்பாங்க அவங்க மனசு நிச்சயமா சந்தோஷப்படும் சார்" என்று பெண் அவள் கூற அதை கேட்டவனுக்கு அவள் கூற்று ஏற்றுக் கொள்ளும் படியாக தான் இருந்தது சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டு தன் கண்களை துடைத்துக்கொண்டவன் "என்ன ஞானபிரகாசம் நவிக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த ஊருக்கு வர சொல்லி இருக்காரு மாயா குழந்தையோட வர சொல்லி இருக்காரு நீயும் வரியா" என்று இவன் கேட்க "நான் எப்படி நீங்க போயிட்டு வாங்க சார்" என்றாள் தயக்கத்துடன். "இல்ல மாயா நீயும் வா இவனால உன்னை விட்டு இருக்க முடியாது நீ வந்தா தான் இவன் அமைதியா இருப்பான் ப்ளீஸ் வாயேன்" என்று முதல் முறையாக அவன் இவளிடம் மன்றாட அவன் வார்த்தைகளில் விக்கிது போனவள் "சார் நீங்க என்கிட்ட போய் கெஞ்சிரிங்க இப்ப என்ன நான் உங்க கூட வரணும் அவ்வளவுதானே தாராளமா வரேன் எப்ப போகணும்?" என்று இவள் அவசரமாய் கேட்க "நாளைக்கு கிளம்பலாமா ஐயா நேத்து நைட்டு தான் போன் பண்ணாரு ஆனா இன்னிக்கு கல்யாண வேலை கொஞ்சம் இருக்கு அதனால அது எல்லாத்தையும் இன்றைக்கே முடிச்சுட்டு நாளைக்கு கிளம்பிடலாம் நாளைக்கு மார்னிங் கிளம்புனா கரெக்ட்டா இருக்கும் ஞானப்பிரகாசம் சாரோட ஊரு இங்க இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு சோ அதனால நாம போய் சேர்வதற்கே எப்படியும் மூணுல இருந்து நாலு மணி நேரம் ஆகிடும் மேபி அங்க போய் நம்ம தங்கற மாதிரி கூட இருக்கும் அதனால கர்ணனுக்கும் உனக்கும் துணி பேக் பண்ணிக்கோ" என்று இவன் கூற "உங்களுக்கு டிரஸ் எடுத்து வைக்க வேணாமா?" என்றாள் இவள் ஒருவித ஆவலில்
அதில் ஒரு சிறு புன்னகை சிந்தியவன் "சரி எனக்கும் சேர்த்து நீயே பேக் பண்ணிடு நான் இப்போ கிளம்புறேன் கல்யாணத்துக்கு அலங்காரம் பண்ற வேலைக்கு ஆட்களை வர சொல்லி இருந்தேன் அவங்க கிட்ட போய் என்னென்ன மாதிரி டெக்கரேஷன் பண்ணனும்னு டீடைல் சொல்லிட்டு வந்துடறேன் நீ இவன பாத்துக்கோ" என்று ஒருமுறை மீண்டும் தன் மகனை இறுக்க அனைத்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு இவ்வளவு நாட்கள் இல்லாத அளவு ஒரு விதமான நிம்மதியுடன் குழந்தையை அவள் கையில் திணித்துவிட்டு அங்கிருந்த அவன் நகர "உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சார்" என்றாள் தயக்கத்துடன் அவனை இடைநிறுத்தியவாறு யட்சிணி.
அவளின் வார்த்தையில் அப்படியே நின்றவன் "என்ன விஷயம் மா?" என்றான் புரியாமல். "நீங்க இப்ப வேலை இருக்குன்னு சொல்லி இருக்கீங்க சார் அதனால அத பாருங்க நீங்க எப்போ ஃப்ரீயா இருக்கீங்கன்னு சொல்லுங்க அப்ப நான் உங்ககிட்ட அந்த விஷயத்தை பத்தி பேசுறேன்" என்று இவள் கூற அதில் சிறிது நேரம் யோசித்தவன் பின்பு "அதான் நாளைக்கு நம்ம ஊருக்கு போறோம் இல்ல அங்க போய் பேசிக்கலாம் இப்பவே சொல்ல வேண்டிய அவசரமான விஷயம் தான் சொல்லிடு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று அவன் கூற முதல் முறையாக அவன் இவ்வாறு பரிவாக பேசுவதை வியப்புடன் பார்த்தவள் "ஒன்னும் பிரச்சனை இல்ல சார் நாளைக்கு பேசிக்கலாம் நீங்க இப்ப போய் ஒர்க்க பாருங்க" என்று அவனை வழி அனுப்பி வைத்தாள். சரி என்று தலையை அசைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் ஆரன்
படிகளில் இறங்கி வந்தவன் ஒருவித துள்ளலுடன் காட்சியளிக்க அவனை அனைவரும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் ஒரு அளவிற்கு மேல் ஆர்வம் தாங்க முடியாமல் "என்ன கண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்க நீ இப்படி இருக்கணும்னு தான் நாங்க ஆசைப்படறோம் ஆனா அந்த விஷயம் என்னன்னு எங்ககிட்டயே சொன்னா நாங்களும் புரிஞ்சுகிட்டு சந்தோசப்படுவோமில்ல?" என்று ஆர்வத்தில் தியூதா அவனிடம் கேட்டு விட அவள் கூறியதை கேட்டு ஒரு மென் புன்னகை ஒன்றை சிந்தியவன் அவளை தோளோடு அணைத்து "என்னோட பையன் என்ன அப்பான்னு வாயைத் திறந்து கூப்பிட்டான் சித்தி" என்றான் அவளிடம் வெகு நாட்களுக்குப் பிறகு உறவு முறை வைத்து அவளை அழைத்து. அவன் அழைத்த சித்தி என்ற வார்த்தையில் கண்களில் வரும் கண்ணீர் துளித்து விட்டது சரியாக அவன் மூன்று வருடத்திற்கு முன்பு இப்படி அவளிடம் பேசியது அதன் பின்பு இப்பொழுதுதான் பேசுகிறான் அதில் உணர்ச்சி வசப்பட்டு அவன் நெஞ்சில் சாய்ந்து அவள் கண்ணீர் விட்டு கதறி அழுக ஆரம்பிக்க அதை பார்த்து அனைவரும் பதறிப் போயினர். ஆனால் ஆரன் அவள் நிலை உணர்ந்து அவளை தன்னோடு அணைத்து "சாரி சித்தி இனி உங்கள் யாரையும் ஹர்ட் பண்ண மாட்டேன் இவ்வளவு நாட்கள் ஏனோதானோன்னு வாழ்க்கையவே வாழ பிடிக்காமல் வாழ்ந்துகிட்டு இருந்தேன் ஆனா இப்ப என்னோட வாழ்க்கைக்கான அர்த்தமா என்னோட பையன் வந்திருக்கான் எனக்காக இல்லனாலும் அவனுக்காகவாவது நான் இனி சந்தோஷமா வாழ்ற மாதிரி என்ன மாத்திக்க முயற்சி பண்றேன்" என்று அவளிடம் கூற அதை கேட்டு சரி என்று தலை அசைத்தவள் அவன் குழந்தை பேசியதை கூறியதை இப்பொழுதுதான் நினைவுக்கு கொண்டு வந்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்
" நீ.... நீ... முதல்ல என்ன சொன்ன தம்பி உன்னை அப்பான்னு கூப்பிட்டானா நிஜமாவா சொல்ற அப்படியா அவன் உன்னை கூப்பிட்டான்? அவ பேசுறானா இப்போ?" என்று அவன் ஆனது அதிர்ச்சியுடன் கேட்க கயலுக்குமே அவன் கூறிய வார்த்தைகளில் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. "உன்னை அப்பான்னு கூப்பிட்டானா கரிகாலா?" என்று கயல்விழியும் ஒரு புறம் ஆச்சரியமாக கேட்க "ஆமா ம்மா அவன் இப்போ கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சிருக்கா அது கூட மாயா தான் அவனுக்கு என்ன அப்பான்னு கூப்பிட சொல்லி ட்ரெய்னிங் கொடுத்து இருக்கா எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? முதல் முறையா அவன் வாயிலிருந்து என் அப்பான்னு கூப்பிட்டத இப்ப நெனச்சு பார்க்கும்போது எனக்கு அப்படி உடம்பெல்லாம் புல்லரிக்குது" என்று அவன் உண்மையான சந்தோஷத்துடன் கூட அதைக்கேற்ற மற்றவர்களுக்கும் அவனின் சிரிப்பு படிந்த முகத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்து ஆருரன் மற்றும் ஆருத்ரன் இருவரும் ஒருவரை மற்றொருவர் பார்த்துக் கொண்டவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். அவர்களுக்கு நன்றாக தெரிந்தது யட்சிணியின் இந்த செயல் எதற்காக என்று
"என்ன ஆரூரா நம்ம மருமக பயங்கரமான ஆளா இருப்பா போல குழந்தையை வச்சு அழகா காய நகத்துறாலே எப்படியும் நம்ம நினைச்சது நடந்துரும் போலவே" என்று தன் அண்ணனிடம் ஆருத்ரன் கூற "ஆமாண்டா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு சீக்கிரமே என் பிள்ளைக்கு கண் பார்வை கிடைக்கணும் அவன் பழையபடி இந்த உலகத்தை பார்க்கணும் அதுதான் என்னோட ஆசை அது என் பேர மூலமாக என்னோட மருமக மூலமாகவும் நடக்குதுன்னா எனக்கு சந்தோஷம்தான்" என்றான் மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் ஆரூரன்.
தொடரும்....
Comments
Post a Comment