பெண் கவிதை 64

ஆரன் ஞானப்பிரகாசத்தில் அருகே நின்று அவர் என்ன கூறப் போகிறார் என்று கேட்பதற்காக தன் கவனத்தை முழுவதும் அவர் மீது வைத்திருந்தான் அவரோ தயங்கியவாரே நின்று இருக்க ஒரு அளவிற்கு மேல் பிடிக்காமல் "அய்யா என்ன விஷயம்னு சொல்லுங்க இப்படி அமைதியா நிற்கிறதுனால எனக்கு தான் நேரம் வீணா போகுது" என்று அவன் பேச அதில் தன்னை ஒருவராக சமன் செய்து கொண்டு அவனை நோக்கியவர் "நீங்க இன்னும் நற்பவியத்தான் நினைச்சுகிட்டு இருக்கீங்களா தம்பி?" என்றார் தயக்கத்துடன் 


அவர் கூறியதை கேட்டு புரியாமல் குழம்பியவன் "நற்பவியைத்தான் நினைச்சிட்டு இருக்கியான்னு கேட்டா என்ன அர்த்தம்? இந்த கேள்வியே முதல்ல தப்பா இருக்கு ஐயா அவளை நான் நினைக்காம இருந்தா தான் தப்பு அவ என்னோட உயிரோட கலந்தவ அவள எப்படி நான் நினைக்காமல் இருப்பேன்" என்று இவன் கோபமாக கேட்க "இல்ல தம்பி அது தப்பு இனிமே நீங்க அந்த புள்ளயை நினைக்கிறது உங்களையே நம்பி உங்களுக்கு கழுத்தை நீட்டி இருக்கிற இந்த பொண்ணுக்கு துரோகம் பண்ற மாதிரி ஆகிவிடும்"  என்றார் அவர் கைகளை பிசைந்து கொண்டு மெல்லிய குரலில். அதில் முதலில் புரியாமல் குழம்பியவன் பின்பு அவர் பேசியதற்காக அர்த்தத்தை புரிந்து கொண்டு அறிந்து அவர் புறம் திரும்பினான் 

"ஐயா நீங்க என்ன பேசுறீங்க நான் யட்சிணி ஏத்திட்டு அவ கூட வாழ்ந்தா  அது நற்பவிக்கும் நான் துரோகம் பண்ண மாதிரி ஆகும் அவ என்ன விட்டு போயிட்டா என்ற ஒரே காரணத்துக்காக நான் இவளோட சேர்ந்து வாழ முடியுமா நீங்க என்ன லூசுத்தனமா பேசுறீங்க" என்று இவன் கோபமாய் கத்தி விட அதில் பயந்து போனவர் "இல்ல தம்பி நான் ரொம்ப சரியா தான் பேசுறேன் ஆனா நீங்க தான் இன்னும் நிதர்சனத்தை புரிஞ்சிக்காம இருக்கீங்க யாருமே பார்க்க முடியாது இடத்துக்க நற்பவி போயிட்டா ஆனா உங்க மனைவியை பத்தி யோசிச்சு பாருங்க அந்த புள்ள முன்னாடி நீங்க நேத்து அப்படி அழுதீங்களே அதை பார்த்து கூட அந்த புள்ள முகத்துல கவல தான் தெரிஞ்சுதே தவிர்த்து நீங்கள் நற்பவிய நினைச்சு அழுதத பார்த்து கோபம் வரல அதிலேயே அந்த புள்ளையோட மனசு எனக்கு தெரியுது எந்த ஒரு பெண்ணும் தன்னோட கணவன் தன் முன்னாடி இன்னொரு பெண்ணை நினைக்கறதையும் இல்ல அந்த பொண்ண நெனச்சு அழகுறதையும் விரும்ப மாட்டா. ஆனால் அந்த விஷயத்துல கூட அந்த புள்ள விட்டுக்கொடுத்துச்சு இதில் இருந்தே தெரியலையா அந்த புள்ளைக்கு எவ்வளவு நல்ல மனசு இருக்குன்னு" என்று அவர் கூறும் காட் "ஐயா நீங்க புரியாம பேசுறீங்க யட்சிணியோட்அ கேரக்டரே அப்படித்தான் அவ எல்லாருக்காகவும் யோசிக்கிறவ. அவளுக்குன்னு அவ ஒரு வாழ்க்கை இருக்குன்னு நினைக்கவே மாட்டா. அப்படி அதை யோசித்து இருந்தா என் அப்பா சொல்ற பேச்சு கேட்டுக்கிட்டு என்னை என் குடும்பத்தோடு சேர்த்து வைக்கணும்னு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் கொடுத்த கஷ்டத்தை எல்லாம் தாங்கிட்டு என் கூட  இருந்து இருப்பாளா சொல்லுங்க? அவ கேரக்டரே அதுதான் எதுவுமே அவளுக்கு தப்புன்னு தெரியாது எல்லாமே அவளை பொறுத்த வரைக்கும் சரிதான் கள்ள சாப்பிடமில்லாத குழந்தை மாதிரி அவ. நீங்க இத மட்டும் தான் பார்த்து இருக்கீங்க ஆனா நான் நவியோட நினைவில் அவகிட்ட எவ்வளவு கஷ்டப்பட்டு புலம்பி இருக்ககேன்னு அவளுக்கு நல்லா தெரியும் அப்போ எல்லாமே எனக்கு ஆதரவாக இருந்து என்ன சமாதானம் தான் செய்வாலே தவிர நற்பவியை பத்தி என்கிட்ட பேசாதீங்கன்னு கோவப்பட்டது கிடையாது. அதுதான் அவளோட குணமே" என்று அவன் யட்சிணியை பற்றி நீளமாக ஒரு விளக்கம் கொடுக்க அவன் கூறியதை எல்லாம் கேட்டு புன்சிரிப்புடன் அவனைப் பார்த்தவர் "இதிலேயே உங்களுக்கு அந்த புள்ள மேல இருக்கிற எண்ணம் என்னன்னு உங்களுக்கு புரியலையா தம்பி?" என்றார் அவர் 

அதில் "ஐயா நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல" என்று தலைமுடி இறுக கோதிக்கொண்டு ஆரன் கோபமாக கேட்க "அந்த புள்ளையோட குழந்தை மனச பத்தி யோசிச்சீங்களா எல்லாருக்காகவும் யோசிக்கிற மனச கடவுள் எல்லாருக்கும் கொடுக்க மாட்டார் இதுலையே இந்த புள்ள எப்பேர்பட்ட சொக்கத்தங்கம்னு உங்களுக்கு புரிய வேண்டாமா அதை விடுங்க நீங்க சொல்றீங்களே நற்பவிய பத்தி அந்த புள்ள கிட்ட பேசும் போது அந்த புள்ள உங்கள அரவணைச்சு சமாதான செய்யணும்னு. ஆனா உள்ளுக்குள்ள தன்னோட கணவன் தன் முன்னாடி இன்னொரு ஒரு பொண்ண பத்தி யோசிக்கிறான் என்று அந்த பிள்ளைக்கு ஒரு செகண்ட் ஆவது எண்ணம் தோணாம இருந்திருக்காது ஏன்னா அந்த புள்ளையோட கண்ண பாக்கும்போது தெரியுது அந்த புள்ளைக்கு உங்க மேல எவ்வளவு நேசம் இருக்குன்னு  அந்த நேசத்தை நீங்கதான் இன்னும் புரிஞ்சுக்காம இருக்கீங்க" என்று ஞான பிரகாசம் கூற அதைக் கேட்டு அதிர்ந்து போனால் ஆரன் 

என்ன கூறுவது என்று தெரியாமல் தடுமாறி நிற்க "கர்ணனை கூட அந்த புள்ள ஏன் ஏத்துக்குச்சுன்னு நினைக்கிறீங்க உங்க மேல இருக்கிற நேசம் தான் தம்பி. ஏன்னா கர்ணன் உங்களுடைய ரத்தம். அந்த புள்ள உங்கள நேசிக்கும் போது உங்க பிள்ளையை நேசிக்க மாட்டாளா என்ன? அதுவும் அவ புள்ளையா கர்ணனை அவ வளக்குறா இதுக்கும் ஏதாவது வேற காரணம் சொல்லாதீங்க நான் சொல்றது தான் உண்மை கர்ணனுக்கு ஒரு நல்ல தாயாவும் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியாவும் அந்த புள்ளையால மட்டும் தான் இருக்க முடியும் தம்பி தயவு செஞ்சு நான் உங்ககிட்ட ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் தான் வைக்கிறேன் இறந்து போன நற்பவி நெனச்சு நிகழ்காலத்தில் இருக்கிற யட்சிணியை உயிரோட கொன்னுடாதீங்க அந்த பொண்ணு கூட சேர்ந்து சந்தோஷமா வாழுங்க இதுதான் என்னோட வேண்டுகோள் இதுக்கு மேல உங்களோட விருப்பம்" என்று கூறிவிட்டு அவர் தோளை ஒருமுறை தட்டியவர் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து விட எவ்வளவு நேரம் ஆரன் அங்கேயே நின்றிருந்தனோ தெரியவில்லை 

மெல்ல நடை இட்டு வேறு ஏதோ யோசித்தவாறு துரியன் மற்றும் யட்சிணியின் அருகே வந்துவிட யட்சிணி அழுது கொண்டிருந்த கர்ணனை தானும் அழுது  
கொண்டே சமாதானம் செய்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் ஆரணை காணவில்லை என்றவுடன் கர்ணன் அழ ஆரம்பித்து விட அவனின் அழுகையை கண்டு அவளுக்கும் அழுகை வந்துவிட்டது 

துரியனுக்கு தான்"  ஐயோ இவை6ங்க ரெண்டு பேர்ல யாரு குழந்தை தெரியலையே" என்று தலையைப் பீய்த்து கொள்ளலாம்  என்று தோன்றியது "என்னம்மா நீ அவன் அழுவுறானா நீயும் கூட சேர்ந்து அழுகிற நீ தான் அவளை சமாதானப்படுத்தணும் இப்படி நீயும் அழுதுகிட்டு இருக்கியே" என்று யட்சிணியின் கன்னத்தை துடைத்து விட்டவாறு  துரியனுக்கு கூற "இல்ல ண்ணா அவன் அழுதா எனக்கு அழுகை வருது நானும் எவ்வளவு சமாதானப்படுத்தி பார்க்கிறேன். ஆனால் அமைதியாகவே மாட்டிக்கிறான் நான் என்ன பண்றது" என்று உதட்டைப் பிதுக்கி விசும்பியவாறு அவள் கர்ணனை நெஞ்சோடு அனைத்து வண்ணம் அழுகை குரலில் பேச அதை கேட்ட ஆரனுக்கு உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள் தோன்றியது. கர்ணன் மீது அவள் வைத்திருக்கும் அபரிதமான இந்த அன்பை என்னவென்று கூறுவது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க அப்பொழுதுதான் ஞானபிரகாசம் கூறிய வார்த்தைகள் அவன் நினைவிற்கு வந்தது 


"உங்க மேல அந்த புள்ள உயிரையே வைத்திருக்கிறா அப்படி இருக்கும்போது உங்க புள்ளைய தன் குழந்தையை அந்த புள்ள பார்க்காத என்ன?" என்று அவர் கூறிய வார்த்தைகள் மீண்டும் என்னை நினைவிற்கு வந்து செல்ல குழந்தை மீது அவள் வைத்திருக்கும் பாசத்திற்கான முதல் காரணம் அவள் தன் மீது வைத்திருக்கும் நேசம் தான் என்பதை அந்த நொடி புரிந்து கொண்டான் ஆரன் 


அவர்கள் அருகே வந்தவன் கிளம்பலாம் என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு காரின் பின்பக்க சீட்டில் ஏறி அமர்ந்து விட "சார் என்ன சார் இவன் அழுதுகிட்டே இருக்கா சமாதானம் பண்ணாம நீங்க பாட்டுக்கு வந்து உட்கார்ந்துட்டீங்க இந்தாங்க இவன புடிங்க" என்று கூறியவரே அழுகையுடன் ஆரன் அருகே பின் சீட்டில் ஏறி அமர்ந்து யட்சிணி கர்ணனை அவன் கையில் கொடுக்க தன் தந்தையை கண்டவுடன் பாய்ந்து சென்று அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுகையை சற்று நிறுத்தினான் கர்ணன் அவனின் அழுகையை கண்டு இவளும் அழுது கொண்டிருக்க ஏதோ ஒரு உந்துதலில் அவள் கரத்தை பிடித்து இழுத்து தன் கைவளைவில் வைத்துக் கொண்டவன் "நீயும் அழாத" என்றான் அவள் கண்ணீரை தன் இரும்பு கரம் கொண்டு துடைத்து விட்டவாறு ஆரன் 


அதில் ஒரு நொடி அதிர்ந்து பின்பு உடனே தன்னை சமன் செய்து கொண்டவள் "நீங்க முதல்ல தம்பியை சமாதானப்படுத்துங்கள் சார்" என்றாள் மெல்லிய குரலில் அவன் தோளில் தன்னையே அறியாமல் சாய்ந்து விசும்பியவாறு. அதில் அவனையும் அறியாமல் ஒரு சிறு புன்னகை இதழின் ஓரம் பூக்கத்தான் செய்தது ஆரனுக்கு. கர்ணன் அப்படியே அவன் தோளிலிருந்து இறங்கி அவன் மடியில் வாகாய் அமர்ந்து கொண்டு அவன் சட்டையில் தன் முகத்தை தேய்த்துக் கொண்டே இருக்க அவனை தன் நெஞ்சோடு அனைத்து நல்ல தட்டி உறங்க வைக்க ஆரம்பித்தான் ஆரன் தந்தையின் கதகதப்பில் கர்ணன் உறங்க ஆரம்பித்து விடு தன்னவனின் கைவளவில் இருப்பதாலோ என்னவோ ஒரு பாதுகாப்பு எண்ணம் சூழ்ந்தது போல் தோன்றியது அவளுக்கு. அந்த உணர்வில்  அவன் தோளில் சாய்ந்து கண்மூடி உறங்க ஆரம்பித்து விட்டால் பெண்ணவள் ஆரனுக்கு கைவளைவில் இருக்கும் மனைவியையும் தன் நெஞ்சோடு புதைந்திருக்கும் மகனையும் உணரும் பொழுது உள்ளுக்குள் ஒருவித பரவச உணர்வு வர அவர்கள் இருவரையும் அழுத்தமாய் தன்னோடு அனைத்து குழந்தையின் நெற்றியில் இதழ் ஒற்றிய ஆரன் தன்னையே அறியாமல் யட்சிணியை நெற்றியிலும் இதழ் பதித்து இருந்தான்.


இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துரியனுக்கு தன் தங்கையின் வாழ்வு இனி நன்முறையில் மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது

மாலை நேரம் போல் வீட்டிற்கு வந்தவர்களை அனைவரும் வரவேற்க யாரிடமும் இதுவும் பேசாமல் அமைதியாக தன் அறைக்கு சென்று விட்டான் ஆணவன். ஆனால் அது யாருக்கும் பெரிதாக ஒன்றும் தவறாக தெரியவில்லை அதன் பின்பு அவரவர் அவர்கள் வேலையில் கவனம் செலுத்த துவங்கி விடு இரவு வேலை தன் தந்தையை தேடி வந்தான் அவன் அறைக்கு ஆரன். அவன் அறை ஒரு சிறிய வீடு போன்ற அமைப்பு கொண்டது என்பதால் படுக்கை அறைக்கு முன்பாக இருந்த ஹாலில் அமர்ந்து லேப்டாப்பில் அலுவலக சம்மதமாக வேலைகளில் ஈடுபட்டிருந்தான் ஆரூரன்

" உள்ள வரலாமாப்பா" என்று அந்நேரம் ஆரன் குரல் கேட்க அதில் நிமிர்ந்து தன் மகனை நோக்கியவன் "என்னடா ரூம்குள்ள வரதுக்கு பர்மிஷன் நல்லா கேட்கிற முதல்ல உள்ள வா" என்றாம் ஆரூரன் அதில் அவன் அருகே வந்து அமர்ந்த ஆரன் அடுத்து கூறிய செய்தியில் அதிர்ச்சியில் விழிகளை விரித்தான் ஆரூரன்.

தொடரும்...


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....