பெண் கவிதை 59
"நான் உன்கிட்ட சில விஷயங்களை தெளிவா சொல்லணும்னு நினைக்கிறேன் நான் சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு உனக்கு விருப்பம் இருக்கா?" என்று கேட்ட ஆரன் குரலில் நான் கூறுவதை நீ கேட்டே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது. அதை உணர்ந்து கொண்ட யட்சிணி "கேப்ப சார் சொல்லுங்க" என்றாள் மெல்லிய குரலில் தலை குனிந்து
அதில் ஒரு பெரும் மூச்சை ஒன்றை விட்டவன் தன் தலையை ஒரு முறை அழுத்தமாய் கோதிக்கொண்டு அவனை அழுத்தமாய் பார்த்தான். "முதல் விஷயம் நீ தான் கர்ணனுக்கு அம்மா அது எப்பவும் மாறாது புரியுதா?" என்று ஆரன் கூற அவன் கூறியதைக் கேட்டவளுக்கு உள்ளுக்குள் ஆனந்த அதிர்ச்சியாக இருக்க தான் காதால் கேட்ட செய்தி உண்மைதானா என்ற நோக்கில் மீண்டும் அவன் முகத்தை நிமிர்த்து பார்த்தால்ள். அவளின் எண்ணத்தை உறுதியாக்கும் வகையில் "நான் இப்ப சொன்ன விஷயம் உனக்கு அதிர்ச்சியா தான் இருக்கு மாயா பட் இதுதான் உண்மை நீதான் கர்ணனுக்கு இனி அம்மா அது எப்பவும் மாறாது. ஆனால் இன்னொரு விஷயத்தையும் நான் உன்கிட்ட சொல்லுக்கணும்னு நினைக்கிறேன்" என்று அவன் கூறும் பொழுது அடுத்து இவன் என்ன கூறுவானோ என்று உள்ளுக்குள் பதட்டமாக இருந்தது அவளுக்கு
அவளின் பதட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் "ஆனால் எனக்கு மனைவியா நீ ஆகுறதுக்கு இப்போ நேரம் இல்ல" என்று அவன் கூற அதைக் கேட்டு அதிர்ந்து அவனைப் பார்த்தாள் அவனின் அதிர்ச்சியை இவன் உணர்ந்து கொண்டானோ என்னவோ மேலும் தன் பேச்சை தொடர்ந்தான். "என் மனசுல இப்பவும் நற்பவி தான் இருக்கா அது உனக்கே நல்லா தெரியும் நேத்து நான் உன்கிட்ட நடந்துக்கிட்டது மனசு தடுமாற்றத்தினால் மட்டும்தானே தவிர்த்து உன் மேல எந்த ஒரு அஃபெக்ஷனை எனக்கு இன்னும் வரல அது வரும் இல்லனா வராமல் போகுமா என்னால உன்னை ஏத்துக்க முடியும் என்று 100% சுயரா சொல்ல முடியாது ஆனால் நீ என் பையனுக்கு ஒரு நல்ல அம்மாவா இருப்பன்னு நினைக்கிறேன் நீ என்னோட காதல இதுவரைக்கும் எதிர்பார்த்ததில்லை அது எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் என் பையனுக்கு உன்னை விட ஒரு நல்ல தாய் கிடைக்க மாட்டா அதனால தான் நான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கேன் அண்ட் பியூட்டச்சர்ல எனக்கு உன்னை புடிச்சி நான் ஊன கூட கூட வாழலாம். பட் என்னால உன்னை எப்ப ஏத்துக்க முடியும் என்பதை என்னாலே சொல்ல முடியாது கொஞ்சம் வெயிட் பண்ணு என் மனசு மாறறதுக்கு டைம் எடுக்கலாம் இது எல்லாத்தையுமே நான் ஒரு கணிப்பா தான் சொல்றேன் 100% உறுதியா சொல்ல முடியல நவியை நான் எவ்ளோ காதலிச்சேன் நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன் அப்படி இருக்கும்போது அவளை என்னால் அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துவிட முடியாது அவ உருவத்தால என் கூட இணைந்து இல்லானாளும் உணர்வுகளால என் மனசுக்குள்ள எப்பவும் பதிச்சு தான் இருக்கா அதனாலதான் என்னால் இவ்வளவு வருஷம் அவ இல்லன்னாலும் வாழ முடியுது நீ மத்தவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறவக மத்தவங்களோட உணர்வுகளை பபுரிஞ்சிக்குறவ. அதனால் தான் உன்கிட்ட நான் இவ்ளோ தெளிவா பேசிகிட்டு இருக்கேன் இல்லன்னா சரிதான் போடின்னு எப்பயோ உன்னை தூக்கி எறிஞ்சிட்டு போயிருப்பேன் இன்னிக்கி காலைல கூட நீ பார்த்தல்ல என் பையன் என்ன விட உன் கூட இருக்கறதுக்கு தான் அதிகமா விருப்பப்படுறான். நான் உன்னை என் மகனுக்கு தாயை ஏத்துக்கிறதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அவன நீ நல்லா வளர்ப்பாங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு மாயா அதனாலதான் அவனோட பொறுப்ப உன்கிட்ட விடுற ஒரு தந்தையா இருந்து அவனுக்கு என்னென்ன செய்யணுமோ அது எல்லாத்தையும் நான் செய்வேன் ஆனா ஒரு தாய் ஸ்தானத்துல இருந்து அவனுக்கு என்ன செய்யணுமோ அதை நீ தான் செய்யணும் நான் சொல்றது உனக்கு புரியுதுதானே?" என்று ஆரன் அழுத்தமான குரலில் கேட்க அவன் கூறிய வார்த்தைகளில் உள்ளுக்குள் உடைந்திருந்தவள் இறுதியாக அவன் கேட்டதில் அவ்வளவு வலியையும் மீறி புன்னகைத்தாள்
"எனக்கு அப்பு மட்டும் போதும் சார் வேற எதுவும் வேண்டாம் அவன் கூட நான் இருக்கணும். யாருமே இல்லாம அனாதையாக வளர்ந்த எனக்கு என் துரியன் அண்ணா ஒரு உறவாக இருந்தார்னா இப்ப என் மகனா கர்ணன் என்னோட வாழ்க்கையில இன்னொரு உறவா நுழைஞ்சி இருக்கான் அவனோட அருகாமை என்னோட கடந்த கால
கவலைகளை மறக்க வைக்குது அனாதையா வாழ்ந்தவங்களுக்கு தான் சார் அதோட கஷ்டம் தெரியும் பாசத்துக்காக எவ்வளவோ நாள் ஏங்கி இருக்க தெரியுமா?அப்ப எல்லாம் துரியன் அண்ணா எனக்கு பாசத்தை காட்டினாலும் அம்மா அப்பா இல்லையே என்கிற ஏக்கம் எனக்குள்ள இருந்துட்டு தான் இருக்கும் ஆனா இப்ப அந்த ஏக்கங்கள் எல்லாம் போக்குவதற்கு தான் என் பையனை என் அம்மா அப்பா வந்திருக்கான்னு எனக்கு தோணுது எனக்கு வேற எதுவும் வேண்டாம் சார் நீங்க என்கிட்ட கொஞ்சி குலாவ வேண்டாம் ஆனால் சாதாரணமாக ஒரு மனுஷியா மதிச்சு ஒரு பிரண்டா என் கூட பழகுங்க எனக்கு அதுவே போதும் என்னை தயவு செஞ்சு விலகி விரோதி மாதிரி பாக்காதீங்க சார்" என்று கூறும் பொழுதே அவள் குரல் கமரி விட்டது
அதில் ஆரனுக்கு ஏதோ போல ஆகிவிட மீண்டும் தன் தலையை ஒருமுறை கோதி விட்டவன் "மாயா நான் ஆரம்பத்திலிருந்து இதைதான் சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ எனக்கு ஒரு நல்ல பிரண்டா இருக்க. என்னோட உணர்வுகளை நீ புரிஞ்சுக்கிற எந்த ஒரு ஆணும் தனக்கு இப்படி ஒரு தோழி கிடைக்கணும்னு எதிர்பார்க்க தான் செய்வான் என்னோட உணர்வுகளை புரிஞ்சு எனக்காக ஆறுதல் சொல்ற எனக்கு உன்னை ஒரு தோழியா ரொம்ப பிடிக்கும் ஆனால் மனைவி என்ற ஸ்தானத்தில் உன்னை என்னால வைக்க முடியல தயவு செஞ்சு நீ என்ன தப்பா நினைச்சுக்காத ஆனா கண்டிப்பா என்னோட பெஸ்ட் பிரண்டு நீ தான். அந்த ஸ்தானத்திலிருந்து உன்ன நான் இறக்கி வைக்க மாட்டேன் புரியுதா?" என்று அவன் அழுத்தமாய் கேட்க அதைக் கேட்டவனுக்கு சில்லென்று உள்ளுக்குள் சாரல் வீசியது
"புரியுது சார் இதுவே போதும் எனக்கு வேற எதுவும் வேண்டாம் நீங்களும் தயவு செஞ்சு நேத்து நடந்ததை பத்தி யோசிச்சு உங்க உடம்புக்கு கெடுத்துக்காதீங்க அது ஏதோ ஆக்ஸிடென்ட்டா நடந்திருச்சு. அதை மறந்துடுவோம்" என்று அவள் கூற நேற்றைய நினைவில் ஒரு நிமிடம் ஆரன் உடல் இறுதி நாளும் உடனே தன்னை சமம் செய்து கொண்டவம் "நானும் இந்த விஷயத்தை தான் உன்கிட்ட சொன்னேன் ஓகே லீவ் இட் இனி நம்ம ஃபிரண்ட்ஸ் ஓகேவா?" என்று ஆரன் கேட்டதில் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றவள் "ஓகே சார் ஃப்ரெண்ட்ஸ்" என்றாள் அவளும்
"சரி டைம் ஆகுது போய் தூங்கலாம் இனி இந்த வீட்டை விட்டு வெளியே போறத பத்தி நீ யோசிக்க கூடாது புரியுதா?" என்று இவன் அழுத்தமாய் கூற அதில் தன் தவறை உணர்ந்தவள் "இனி இந்த மாதிரி முட்டாள் தனமா இந்த முடிவை எடுக்க மாட்டேன் சார் சாரி" என்றாள் மெல்லிய குரலில். அதற்கு மேல் ஆரன் எதுவும் பேசவில்லை அமைதியாக சென்று கட்டிலில் படுத்துக்கொள்ள இப்பொழுது கட்டிலில் அவன் அருகில் படுப்பதா அல்லது வேறு இடத்தில் படுப்பதா என்று யோசித்துக் கொண்டே நின்று இருந்தாள் பெண் அவள். அதை உணர்ந்து கொண்ட ஆரன் "கட்டில்ல நாலு பேர் படுக்கிற அளவுக்கு இவ்வளவு இடம் இருக்கு அதனால நீயும் படுக்கலாம் எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன் குட் நைட்" என்று கூறிவிட்டு வேறு புறம் திரும்பி ஆரன் உறங்க ஆரம்பித்து விட அவன் கூறிய வார்த்தைகளில் மகிழ்ந்தவள் கட்டிலில் ஓரம் படுத்துக்கொண்டான் ஆனால் குழந்தையின் அருகாமை இன்றி அவளுக்கு உறக்கம் வரவில்லை
அதற்கு மேல் முடியாமல் வேகமாய் எழுந்து தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கர்ணனை தூக்கிக் கொண்டு வந்து தங்கள் இருவருக்கும் இடையில் படுக்க வைத்தவள் குழந்தையை ஒரு கையால் அரவணைத்த வண்ணம் உறங்க துவங்கி விட்டாள்
அதை உணர்ந்து கொண்ட ஆரனுக்கு இவ்வளவு நாட்கள் இருந்த வலியை மீறி இதழில் ஓரம் ஒரு சிறு புன்னகை உதிர்ந்தது.
*****************************
யுதிஷ்டிரன் மற்றும் தஷிகாவின் திருமண வேலைகள் அனைத்தும் துரிதமாக நடந்து கொண்டிருந்தது முக்கியமாக அனைத்து பொறுப்பையும் ஏற்று செய்து கொண்டிருந்தது கரிகால் ஆரன் மற்றும் மாய யட்சிணி தான். இருவரும் திருமணத்திற்காக ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தனர் இதற்கு இடையில் ஆரூரன் எவ்வளவோ முறை கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு ஆரனிடம் கூறியிருக்க அவளும் அதை மறுத்து விட்டான் . எப்படி இவனை வழிக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் ஆரூரன் திணறிக் கொண்டிருக்க யட்சிணி அவனுக்கு ஒரு யோசனையை கூறினாள் அந்த யோசனை ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கவே அதை செயல்படுத்த தொடங்கி விட்டான் ஆருரன்
அதன் வெளிப்பாடு அடுத்த சில நாட்களில் ஆரன் கண்மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு அவனை ஒப்புக்கொள்ள வைக்க சாதகம் அமைய உள்ளது.
திருமணத்திற்கு பூக்கள் அலங்காரம் செய்வதற்காக ஆட்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தான் காலையில் ஆரன். அந்நேரம் அவன் கவனத்தை ஈர்த்தது அவன் மழலையும் சத்தம். அதுவும் அவனை முதல் முறையாக பொறுமையுடன் அழைத்தது கர்ணனின் குரல் "அ...ப்..பா" என்று கீச்சு குரலில் சத்தமாக கத்தினான் கர்ணன். தான் கேட்ட குரல் தன் மகனின் குரல் தானா என்று ஒரு நொடி இதயத்துடிப்பே நின்று துடித்தது ஆரனுக்கு. கையில் இருந்து மொபைல் அதிர்ச்சியில் கீழே விட அதிர்சியுடன் குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தான் ஆரன் அவன் கண்களுக்கு தன் மகன் புலப்படவில்லை என்றாலும் அவன் அங்கு தான் இருக்கிறான் என்று நன்றாக தெரிந்து விட்டது ஆரனுக்கு
ஆம் அவன் நினைத்தது போல் வாசலின் புறம் நின்று வந்த யட்சணியின் கரங்களில் அமர்ந்திருந்த கர்ணன் தன் பிஞ்சு குரலால் அழைத்திருந்தான் தன் தந்தையை மறுபடியும். " மறுபடியும் அப்பான்னு கூப்பிடு அப்பு "என்று அவனை தூண்டிவிட்டாள் யட்சிணி குழந்தையின் குரலை கேட்டாவது அவன் முகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஆரனுக்கு வரும் அதன் மூலம் அவனுக்கு கண்மாற்ற அறுவை சிகிச்சை செய்து விடலாம் என்று நினைத்து குழந்தைக்கு கடந்த இரண்டு நாட்களாக அப்பா என்று அழைக்க பயிற்சி கொடுத்து இன்று அதில் வெற்றியும் கண்டு விட்டாள் யட்சிணி. குழந்தையின் குரல் கேட்ட ஆரனுக்கு கால்கள் தன் வலுவை இழந்தது போல் ஆக அப்படியே மண்டியிட்டு சோர்ந்து அமர்ந்து விட்டான் ஆணவன்
தொடரும்...
Comments
Post a Comment