பெண் கவிதை 57

துரியன் யட்சிணியை கோபமாய் வீட்டிலிருந்து இழுத்துக் கொண்டு வெளியே செல்ல முற்பட அப்பொழுது யட்சிணியை தடுத்து நிறுத்தியது ஒரு பிஞ்சு மழையின் "ம்மா" என்ற குரல். அந்த குரலில் அப்படியே அனைவரும் திகைத்துப் போயினர் என்றால் யட்சிணிக்கோ தான் காதால் கேட்ட குரல் உண்மைதானா என்று நெஞ்சமே துடித்தது 


துரியன் அப்படியே நடையை நிறுத்தியவன் திரும்பி யட்சினியை பார்க்க அவளோ தலை குனிந்து கண்ணீருடன் நின்றிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் இன்னும் அதிர்ச்சி விலகாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி ஆரன் கரங்களில் இருந்த கர்ணனை நோக்கினான் யட்சிணிக்கு தன் மகன்தான் தன்னை அம்மா என்று அழைத்தானா என்று இன்னும் சந்தேகமாகவே இருக்கவே கண்களில் கண்ணீர் வடிய துடித்தடிக்கும் இதயத்துடன் திரும்பி தன் மகனை நோக்கியவள் குழந்தை தன் முகத்தையே விழியாகற்றாமல் கண்களில் கண்ணீர் வடிய பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு நெஞ்சம் துடித்து போனது 


அவளை நோக்கி கரத்தை நீட்டி உடலை முன்பக்கமாக வளைத்த கர்ணனோ "ம்மா" என்றான் மீண்டும் பிஞ்சு மொழியில். அம்மா என்ற உச்சரிப்பு வாயில் வரவில்லை என்றாலும் முயற்சி செய்தான் குழந்தை. பேசியது அவன் தானா என்று அனைவரும் விக்கித்து போயினர் மகிழ்ச்சியில். இதுவரை குழந்தை வாய் திறந்து இப்படி எந்த வார்த்தைகளையும் உச்சரித்தது கிடையாது இதுதான் முதல் முறை அவன் வாய் திறந்து பேசுவது. அதிலும் முதல் முதலாக அம்மா என்று அழைக்கிறான் அதுவும் யட்சணியை பார்த்து 


அதை கண்டு அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியாக இருக்க தன் மகனின் குரலில் கேட்டு அதிர்ந்து போயிருந்தான் உள்ளுக்குள் ஆரன். வேகமாய் நெளிந்து கீழே இறங்க முற்பட்டு கொண்டிருந்த அவனை தடுத்து தன் முன்பு தூக்கிப் பிடித்த ஆரன் "கர்ணா இப்ப என்ன சொன்ன நீ?" என்றான் அதிர்ச்சியாக. ஆனால் அவனோ தன் பிஞ்சு கரங்களால் தன் தந்தையின் முகத்தை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தான் தன்னை கீழே இறக்க விடவில்லை என்ற கோபத்தில். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ஆரன் "டேய் சொல்லுடா என்ன சொன்ன இப்ப? என்ன சொன்ன நீ?" என்றான் மீண்டும் கர்ஜனையாக. ஆனால் அவனின் கர்ஜனை சத்தத்தில் குழந்தை பயப்படவில்லை. அவனுக்கு மேல் நுனிமூக்கு கோபத்தில் கண்களில் கண்ணீர் வடிய உதட்டைப் பிதுக்கி தன் தந்தையை முறைத்துக் கொண்டு வேகமாய் அவனிடமிருந்து மீண்டும் இறங்க முற்பட்டான்.  குழந்தைக்கு என்ன தெரியும் அவன் கிட்ட இப்படி கேள்வி கேட்டா அவன் என்ன செய்வான்? அவனுக்கு தன் தாய் யட்சிணி வேண்டும் அவள் தன்னை விட்டு விலகிச் செல்வது அவனுக்கு பிடிக்கவில்லை . அதனால் தான் கடினப்பட்டு தன் செப்புவாய் இதழ் திறந்து தன் தாயை அழைத்தான் அவள் நெஞ்சை உருக்கும் வகையில். 


தன் மகனின் செய்கையில் நொந்த ஆருரன் வேகமாய் அவனிடமிருந்து தன் பேரனை பிடுங்கிக் கொள்ள "அப்பாஆஆ" என்றான் கர்ஜனையாக ஆரன்.  "என்னடா அப்பா நோப்பான்னு. அதான் அவன் அவனோட அம்மா ட்ட போகணும்னு இவ்ளோ நேரம் அழுதுகிட்டு இருக்கான்ல  நீ என்னடான்னா அவனை இப்படி இறுக்கி பிடிச்சு வச்சிருக்க அறிவில்ல உனக்கு? ஒரு புள்ளைக்கு அப்பான்னு தான் பேரு. ஆனா கொஞ்சம் கூட அறிவு வளரல உனக்கு" என்று ஆக்ரோஷமாக தன் மகனை திட்டியவன் தன் கரங்களில் இருந்த தன் பேரனை கீழே இறக்கி விட்டான் ஆரூரன். தனக்கு விடுதலை கிடைத்தவுடன் தட்டி தடுமாறி முதலில் நடக்க முயன்ற குழந்தை அது முடியாமல் போகவே அப்படியே தம்மென்று கீழே விழுந்தான். அவனின் செயலில் அனைவரும் அதிர்ந்து போய் அவனை தூக்க முற்பட ஆனால் அவனோ மண்டியிட்டவாறு வேகமாய் ஓடினான் தன் தாயை பார்த்துக் கொண்டே. மண்டியிட்டு அவளை நோக்கி செல்ல தன் மகனின் அம்மா என்ற அழைப்பில் உடல் சிலிர்த்து அப்படியே மண்டியிட்டு அமர்ந்த யட்சிணி அவனை நோக்கி தான் இரு கரத்தையும் நீட்டினாள் கண்களில் கண்ணீர் வழிய உதட்டில் புன்னகையுடன் 


மழலையோ நாலு கால் பாய்ச்சலில் மண்டியிட்டு ஓடி அவள் நெஞ்சில் அடைக்கல புக தன் மகனை தன் நெஞ்சோடு அனைத்து அவன் முகம் முழுவதும் முத்தம் பதித்து முத்தாடினாள் அந்த கன்னித்தாய் 

குழந்தையோ தன் பிஞ்சு கரங்களால் அவள் முகத்தை இரு கரங்களில் பற்றி எச்சில் முத்தங்களால் அவளை நனைய வைத்துக் கொண்டிருக்க ரணபட்டிருந்த இதயத்திற்கு அவனின் எச்சில் முத்தம் குளிர்ச்சியை தந்தது யட்சணிக்கு. "அம்மானு சொன்னீங்களாடா தங்கம் அம்மானு சொன்னியா என்ன? அம்மான்னு சொன்னியா நீ? நான் உனக்கு அம்மாவா என்ன நீ உன் அம்மாவாக தான் பாக்குறியா?" என்று அழுகையுடன் குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்து முத்தம் கொடுத்தவாறு கதறி அழுதாள் .  குழந்தைக்கு என்ன புரிந்ததோ ஆனால் அவள் அழுகிறாள் என்று மட்டும் புரிந்தது அதில் கர்ணனும் உதட்டை பிதுக்கி அழ ஆரம்பிக்க "மாயா அழாத" என்றான் ஆக்ரோஷமாக  ஆரன். அவனின் சத்தத்தில் உடல் தூக்கி வாரி போட்டது அவளுக்கு.  குழந்தையை தன்னோடு இறுக்குமாய் அணைத்த வண்ணம் அவள் பயத்துடன் ஆரனை நோக்க "நீ அழுதா என் பையனும் அழுவான் அவன் அழுகிறது எனக்கு பிடிக்காது" என்று ஆக்ரோஷமாக இவன் கூற "அப்ப கூட நான் அழுகிறது உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கல அப்படித்தானே" என்றும் மனதுக்குள் விரக்தியாக நினைத்துக் கொண்டாள் யட்சிணி 


ஆனால் அவன் என்ன எண்ணத்தில் கூறினான் என்பதை அறியவில்லை அவள்.  அவளின் கண்ணீரை இவன் இதயம் உலுக்குவது போல் இருக்கவே தான் அவளை கண்ணீர் விட வேண்டாம் என்று குழந்தையை ஜாடையாய் வைத்து கூறினான் ஆனால் அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை ரணப்பட்ட பேதை பெண்

கயல் அவள் அருகே சென்றவள் "பாரு அவனுக்கு கூட உன்னை விட்டு இருப்பதற்கு விருப்பமில்லை. ஏண்டி இவ்வளவு நாள் நீ தான் அவனுக்கு அம்மான்னு பக்கத்திலேயே இருந்து பழகி வச்சுட்டு இப்போ திடீர்னு இவனை விட்டுட்டு போவது என்று முடிவு பண்ணி இருக்கியே அவனை பற்றி கொஞ்சம் யோசிச்சு பாத்தியா? பாரு உன்னை விட்டு ஒரு நொடி கூட பிரிஞ்சி இருக்க முடியாம எப்படி ஆர்ப்பாட்டம் பண்றான்னு. இவனயா விட்டுட்டு நீ பிரிஞ்சு போகப்போற சொல்லுடி சொல்லு" என்று ஆக்ரோஷமாய் அவளை பிடித்து கண்ணீருடன் உலுக்கினாள் கயல்

அவளின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் கதறி அழுதவாறு யட்சிணி அமர்ந்திருக்க அவளை தன்னோடு அனைத்து கொண்ட கயல் "இதுவே நீ பெத்து புள்ளையா இருந்தா இப்படி விட்டுட்டு போயிருப்பியா இவன?" என்றாள் அழுகையுடன். அதில் பதறி அவளிடம் இருந்து விலகியவள் அழுகையுடன் அவள் முகம் நோக்கினாள் அவளின் கண்களில் "என்னை பார்த்தால் உனக்கு அப்படியே தோன்றுகிறது இவனை என் பிள்ளை போல, என் வயிற்றில் சுமந்தவனை போல் தானே வளர்த்தேன் என்னை போய் நீ இப்படி நினைத்து விட்டாயே?" என்று குற்றச்சாட்டு இருக்க அதை புரிந்து கொண்ட கயல்விழி அவள் கண்ணீரை துடைத்தவள் " நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு நல்லாவே தெரியுது இவனை என் புள்ளையா வளர்த்தேன் என்ன போய் நீ இப்படி ஒரு கேள்வி கேட்கிறியேன்னு நீ மனசுக்குள்ள நினைக்கிற நீ நினைக்கிறது சரிதான் ஆனால் இப்போ ஏன் இவனை விட்டுட்டு போன நினைக்கிற? நீ ஆரனை எங்க கூட சேர்த்து வைப்பதற்காக மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வரல இந்த வீட்டோட மருமகளா அவனோட சரிபாதி அவ  வாழ்க்கையில வந்துருக்க.  அவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்கான் அவம். அதையே உன் மூலமா தான் அவ. கொஞ்சம் கொஞ்சமா மறந்துகிட்டு இருக்கான் இத அவன் உணரல்லைன்னாலும் எங்க எல்லாருக்குமே தெரியும் அவனுக்கு எல்லாத்தையும் உடனே மறக்க முடியாது யட்சிணி அவனோட இழப்பு ரொம்ப பெருசு அவன் என்ன பண்ணான் ஏது பண்ணான் எனக்கு தெரியாது ஆனால் ஏதோ ஒன்னு பண்ணி இருக்கான் அதனால தான் நீ இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க ஆனா அவன் என்ன பண்ணாலும் தயவு செய்து அவனை மன்னிச்சீடு என் புள்ள தப்பானவன் கிடையாது அவனோட மனசுல அவ்ளோ கஷ்டம் இருக்கிறது தான் அவனை இந்த அளவுக்கு மாத்தி இருக்கு தயவு செஞ்சு நீ அவனை தப்பா நினைக்காத" என்று கயல்விழி கூறிக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து வேகமாய் வெளியேறினான் ஆரன் 


அதை கண்டவர்களுக்கு மேலும் கவலையாக இருந்தது செல்லும் அவனை கண்களில் கண்ணீர் வடிய விரக்தியாக பார்த்துக் கொண்டிருந்த யட்சிணியின் கன்னத்தை தன் பிஞ்சு கரம் கொண்டு தன் புறம் திரும்பிய கர்ணன் அவள் நெற்றியில் ஒட்டிக்கொண்டான் முத்துப்பற்கள் தெரிய. தன் தாய் தன்னிடமே மீண்டும் வந்து விட்டாள் என்ற குஷி அவனுக்கு. அவனின் செயலில் அவ்வளவு வலியையும் மீறி ஒரு சிரிப்பு வெளிப்பட்டது அவள் இதழில் அவன் மூக்கோடு மூக்குரசி அவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவள் அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருக்க ஆருரன் நிலைமையை சரி செய்யும் பொருட்டு "அவளை ரூமுக்கு கூட்டிட்டு போ விழி" என்றான் கயல்விழியிடம் 


அதற்கு சரி என்று தலை அசைத்து விட்டு கயல் அவளை அழைக்க தயக்கத்துடன் இன்னும் அப்படியே தான் இருந்தாள் யட்சிணி அதில் நெற்றியை அழுத்தமாய் நீவி கொண்ட ஆரூரனுக்கு அவளின் பிடிவாதம் ஒருவித சலிப்பை தான் கொடுத்தது தான் அண்ணனின் நிலைமையை புரிந்து கொண்டு ஆருத்ரன் யட்சிணி அருகே சென்று அவளை கைப்பிடித்து தூக்கி நிறுத்தினான் அவள் அமைதியாக எழுந்து நிற்க "இங்கே பார் மா நீ இந்த வீட்டோட மருமகங்குறது மாறாது ஆரனோட பொண்டாட்டிங்கறதும் இனி எப்பவும் மாறாது இனிமே இந்த மாதிரி முட்டாள்தனமா ஏதாவது யோசிச்சு நீயா ஏதாவது பண்ணனும் நினைக்காத இந்த வீட்டை விட்டு நீ இனிமேல் வெளியே போகவே முடியாது அப்படி போகணும்னு நினைச்சின்னா எங்க எல்லாரோட மனசையும் நீ ரணப்படுத்திட்டு போறேன்னு தான் அர்த்தம் இதுக்கு மேல உன்னோட முடிவு தான்" என்று ஆருத்ரன் கோபமாய் கூற அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அமைதியாக கயலின் அருகே சென்று நின்றாள் மங்கை


அதில் ஒரு சிறு புன்னகையை சிந்திய கயல் அவளை அழைத்துக்கொண்டு ஆரன் அறைக்கு சென்று விட்டாள்.


தொடரும்...


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....