பெண் கவிதை 58

இரவு வேலை கர்ணனை பால் கனியில் நின்றவாறு தன்னிடுப்பில் அமர்த்தி கொண்டு சுற்றி முற்று வேடிக்கை காட்டிக்கொண்டே உணவை ஓட்டிக் கொண்டிருந்தாள் யட்சிணி குழந்தை காலையில் பேசியதோடு சரி இப்பொழுது வரை ஒரு வார்த்தை வாயை திறந்து பேசவில்லை ஆனால் காலையில் இருந்து யட்சணியிடம் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறான். இடையில் வந்து ஆருரன் கூட அவனை வெளியே அழைத்துச் செல்வதற்காக அழைக்க அவனோ வரமாட்டேன் என்று முரண்டு பிடித்து தன் தாயுடனே ஒட்டிக் கொண்டு திரிகிறான் 


காலையில் அவள் தன்னை விட்டு விலகி சென்றதிலிருந்து பயத்தில் இருந்தவன் மீண்டும் எங்கே அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்திலேயே அவளை விடவில்லை குழந்தையின் பயத்தை உணர்ந்து யட்ணியும் அவனை யாரிடமும் கொடுக்காமல் தன்னுடனே வைத்துக் கொண்டாள் ஆனால் மனம் காலையில் இருந்து துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. காலையில் கோபமாக வீட்டை விட்டு வெளியே சென்று ஆரனை இதுவரை காணவில்லை வீட்டிற்கும் அவன் வரவில்லை 


எங்கே தான் சென்றான் என்று தெரியவில்லையே என்று உள்ளுக்குள் பரிதவிப்பு இருந்தாலும் குழந்தையின் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டு அவனைத் தான் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கிறாள் மங்கை. குழந்தை எந்த அட்டகாசமும் செய்யாமல் சமத்தாக அவள் ஊட்டிய உணவை உண்டு கொண்டிருக்க "என் சமத்து குட்டி எவ்வளவு அழகா சாப்பிடுற உன்ன பாத்துக்கறது எல்லாம் ஒன்னும் கஷ்டமே இல்லடா அம்மாக்கு நீ சிரமமே வைக்கிறது கிடையாது" என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து கொஞ்சியவாறு அவனுக்கு முழு உணவையும் ஊட்டி முடித்தவள் அவனுக்கு ஜீரணமாக வேண்டும் என்பதற்காக அவனை கீழே நடைபயில விடலாம் என்று நினைத்து தோட்டத்திற்கு தூக்கி வந்தாள். தோட்டத்தில் புல்வெளியில் அவனை இறக்கி விட்டவள் அங்கிருந்து கல்மேடையில் அமர்ந்து மீண்டும் அவனை நடக்க வைக்க முயற்சி செய்யலாம் என்று எண்ணி "வாங்க வாங்க அப்புகுட்டி அம்மா கிட்ட வாங்க இங்க வாங்க" என்று அவன் இரு புறமும் கையை நீட்டி அவனை அழைக்க முதலில் மண்டியிட்டு ஓட முயற்சி செய்தவன் பின்பு மெதுவாக எழுந்து நின்றான். அவனின் ஒவ்வொரு செயலையும் விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவளுக்கு அவன் தன் காலடிகளை எடுத்து ஊன்றி நடந்து வரவேண்டும் என்று உள்ளுக்குள் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது தாய்மனம் 


அவளை வெகு நேரம் காக்க விடாமல் இரண்டு மூன்று முறை கீழே விழுந்தவன் இப்பொழுது ஒரு அளவிற்கு தத்தி தத்து நடக்க ஆரம்பித்து விட்டான். இடை இடையே கீழே விழுந்தும் எழுந்து நடந்து அவளை அடைந்தவன் அவள் காலை கட்டிக்கொண்டு நிமிர்ந்து அவளை பார்த்து புதிதாக முளைத்திருந்த பால் பற்களை காட்டி சிரிக்க அவனை வாரி அனைத்து கண்ணம் கண்ணமாக முத்தம் கொடுத்து கொஞ்ச தள்ளி விட்டாள் குழந்தையை. அந்நேரம் சரியாக கரிகால் ஆரன் கார் சத்தம் கேட்கவே நெஞ்சம் துடித்தது அவளுக்கு. வேகமாய் குழந்தையை தூக்கிக்கொண்டு அவள் அங்கிருந்து ஆரனை பார்த்து விடும் நோக்கில் நடந்து வர காரில் இருந்து இறங்கிய ஆனவனின் தோற்றம் அவளுக்கு அச்சத்தை கொடுத்தது அவன் குடிக்கவில்லை என்று அவன் தோற்றத்தை வைத்தே கண்டு கொண்டவள் அவனின் சோர்ந்த முகத்தை கண்டு மேலும் பதறிப் போனாள்


அவன் மனநிலை நன்றாக புரிந்து அவளுக்கு.  கார் டிரைவரிடம் நன்றி கூறிவிட்டு ஆரன் காரில் இருந்து இறங்கி அவன் உள்ளே நடக்க  "சார்" என்று கத்திக் கொண்டே பின்னே ஓடி வந்தாள் பெண்ணவள். அவனின் சத்தத்தில் அப்படியே நின்றவனுக்கு உடல் இறுகியது ஆனால் அவள் புறம் திரும்பவில்லை அவன். வேகமாய் அவனை நெருங்கியவள் "சார் என்ன சார் இப்படி இருக்கீங்க உங்க முகம் எல்லாம் பாக்குறதுக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்ன ஆச்சு?" என்று பதப்பதைத்துடன் கேட்க அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான். அவனில் செயலில் அவள் மனம் அடிபட்டு போனது தன்னிடம் பேசக்கூட விருப்பம் இல்லையா அந்த அளவிற்கு என்னை பிடிக்கவில்லையா என்று நினைக்க நினைக்க அவள் கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்க்க தொடங்கியது குழந்தை அவள் முகத்தையே உத்து உத்து பார்த்துக் கொண்டிருக்க தன் கண்ணீரை வேகமாய் துடைத்துக் கொண்டவள் குழந்தையை கொஞ்சியவாறு வீட்டிற்குள் அவன் பின்னே நுழைந்தாள் 



வேகமாய் படிகளில் ஏறியவன் ஒரு இடத்தில் தடுமாறி விழ முற்பட அதில் பதறி ஓடி சென்று அவனை தாங்கிப் பிடித்தாள் பெண்ணவள் "சார் பார்த்து சார்" என்று அவள் சத்தமாய் கத்தியவாறு அவனை தாங்கிப் பிடிக்க அவளை இறுக்கமாய் பிடித்துக் கொண்டவனுக்கு தன் மனநிலை நன்றாக புரிந்து விட்டது. மனதிற்குள் ஏதோ தடுமாற்றம் இருந்து கொண்டே இருந்தது அவனுக்கு. அதிலும் யட்சிணி வீட்டை விட்டு செல்கிறேன் என்று கூறியதிலிருந்து மனம் ஒரு நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்க எப்பொழுதும் அனைத்திலும் கவனமாக இருப்பவன் இப்பொழுது படிகளில் ஏறும் போது கவனம் சிதறி விட்டான். 

மெல்ல அவனை தாங்கி பிடித்து அவனை நேராக நிற்க வைத்தவள் "என் கூட வாங்க சார்" என்று அவன் கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டு குழந்தையை ஒரு கையில் தாங்கிக் கொண்ட நடந்தாள் மேலே இருந்த தங்கள் அறை நோக்கி. அரன் அவள் கரங்களை விலக்கி விட முற்பட "நான் உங்களை ஒன்னும் பண்ணிட மாட்டேன் சார் தயவு செய்து என் கைய புடிச்சிட்டு வாங்க நீங்க இப்போ நார்மலா இல்ல ப்ளீஸ்" என்று அவள் மெல்லிய குரலில் கெஞ்சும் விதமாக அவனிடம் மன்றாட அதற்கு மேல் எதுவும் அவன் எதுவும்  செய்யவில்லை அமைதியாக அவன் கரங்களை பிடித்துக் கொண்டு தங்கள் அறைக்க வந்தாள். அறைக்குள் நுழைந்தவன் வேகமாய் அவள் கரத்தை உதறி விட்டு தான் அணிந்திருந்த கோர்ட்டை கழட்டி ஒரு ஓரமாய் வீசிவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொள்ள அவனை செய்கைகளை எல்லாம்  பார்த்துக் கொண்டிருந்த யட்சிணி குழந்தையின் குரலில் தான் சுயநினைவிற்கு வந்தாள்


அவள் தலை முடியை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான் கர்ணன் .அவனின் செயலில் அவளை பொய்யாக முறைத்தவள் "அம்மாக்கு வலிக்குது தங்கம் இப்படி எல்லாம் பண்ண கூடாது" என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்தவாறு அவனை தோளில் போட்டு தட்டிக் கொண்டு அங்கும் இங்கும் நடந்தாள் சிறிது நேரத்தில் குழந்தை உண்ட மயக்கத்தில் நன்றாக உறக்கத்திற்கு சென்று விட அவனை முதலில் கட்டிலில் படுக்க வைக்கலாம் என்று நினைத்தவள் பின்பு வேண்டாம் என்று நினைத்து தொட்டிலில் படுக்க வைத்து தொட்டிலை ஆட்டிக் கொண்டே குளியலறை கதவை வெறித்துக் கொண்டிருந்தாள் 


வெகு நேரத்திற்கு பின்பு குளியல் அறையில் இருந்து வெளியே வந்த ஆரன் இடுப்பில் ஒரு துண்டை மட்டுமே கட்டி இருந்தான். அவனை அந்நிலையில் எதிர்பாராத யட்சிணி "அய்யய்யோ" என்று கத்தி கண்களை இருக்கும் மூடிக்கொண்டாள். அவளின் சத்தத்தில் தான் தன் செயலை எண்ணி தன் தலையில் தானே அடித்துக் கொண்டு ஆரன் "இப்ப எதுக்குடி கத்துற?" என்றான் கோபமாய். ஆனால் அவளோ பதில் கூறாமல் இன்னும் அவனை அந்நிலையில் கண்ட நினைவில் தான் வெட்கத்தில் கண்மூடி அமர்ந்திருந்தாள் அவளிடம் இருந்து சத்தம் வராமல் போகவே அவளின் வாசத்தை வைத்து அவள் கட்டிலில் அமர்ந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து அவளை நெருங்கியவன் சடாரேன்று அவள் கரத்தை பிடித்து தூக்கினான். 


அவன் இழுத்த இழுப்பில் அவன் வெற்று நெஞ்சில் மோதி அதிர்சியுடன் அவனைப் பார்த்தாள் அவள். உடலில் நீர் திவலைகள் வடிய அவளை தன் கை சிறைக்குள் வைத்திருந்த ஆரன் "இப்ப எதுக்கு இப்படி கத்துன  ஐ திங்க பயம் தூங்குகிறான்னு நினைக்கிறேன் நீ இப்படி கத்தினா அவன் எழுதிடுவான்னு உனக்கு தெரியாதா? அறிவில்ல உனக்கு" என்று இவன் கோபமாய் கத்த அப்போது தான் தன் மடத்தனத்தை எண்ணி தன்னைத் தானே நொந்து கொண்டவள் "குழந்தை எழுந்து கொண்டானா?" என்று பயத்துடன் திரும்பிப் பார்க்க அவனோ கன்னத்திற்கு ஒரு கரத்தை முட்டுக்கொடுத்து ஒரு பக்கமாக ஒருகழித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்


அதில் ஒரு பெரும் மூச்சை விட்டவள் ஆரன் புறம் திரும்பி தயக்கமாக தலை குனிந்து "சாரி சார்" என்றாள் மெல்லிய குரலில். "இனி இந்த மாதிரி லூசுத்தனமா எதுவும் பண்ணாத இந்த ரூமுக்குள்ள தான் நீ இனி இருக்க போறன்னு ஆயிடுச்சு இந்த மாதிரி ஏதாவது நடக்கத்தான் செய்யும் இதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு இந்த மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாத புரியுதா?" என்று அவன் கோபமாக கூற அதற்கு ம்ம்ம்ம் என்றாள் மெல்லிய குரலில்

அதற்கு மேல் அவளை விலக்கிவிட்டு அங்கு நில்லாமல் வாட்ரோப்பை திறந்து தனக்கான உடையை எடுத்துக் கொண்டவன் அங்கிருந்து மற்றொரு அறைக்குள் நுழைந்து உடையை மாற்றிக் கொண்டு வந்து கட்டிலில் படுத்து விட "நீங்க இன்னும் சாப்பிடலயே சார்" என்றாள் அவள் கைகளை பிசைந்து கொண்டு. அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் அவன் அமைதியாக இருக்க அதில் மேலும் மனம் அடிபட்டு போனது அவளுக்கு "என்கிட்ட பேசக்கூட உங்களுக்கு பிடிக்கலையா சார் அந்த அளவுக்கு என்ன வெறுக்கிறீங்களா?" என்று இவள் அழுகை குரலில் சுவற்றின் ஓரம் நின்றவாறு கேட்க அதில் எரிச்சலில் தான் படுத்திருந்த இடத்தில் இருந்து வேகமாய் எழுந்தவன் "இந்த மாதிரி ஏதாவது பேசியே என்ன சாகடிக்கணும்னு முடிவு பண்ணிட்டியா?" என்றான் சத்தமாய் 

அதில் இப்பொழுது குழந்தை முடித்து விடுவானோ என்று பயந்தவள் "ப்ளீஸ் சார் நான் எதுவும் கேட்கல நீங்க கோவமா கத்தாதீங்க தம்பி எழுந்திடுவான்" என்று மேலும் அழுகை குரலில் அவனிடம் கெஞ்ச அதில் தலையை இறுக்க பிடித்துக் கொண்டவன் தட்டு தடுமாறி கட்டியிலிருந்து எழுந்து பால்கனி நோக்கி நகரத் தொடங்கினான் செல்லும் பொழுது அவளிடம் கோபமாய் "என் பின்னாடியே வா பேசணும்" என்று கூறிவிட்டு பால்கனிக்கு சென்று விட குழந்தையின் உறக்கத்தை ஒரு முறை கவனித்து விட்டு அமைதியாக பால்கனிக்கு வந்தவள் பால்கனி கதவை மூடிவிட்டாள் தங்கள் பேச்சு சத்தம் குழந்தையை பாதிக்காத வகையில் 


ஆரன் பால்கனியில் இருந்த இரும்பு கம்பியை இறக்க பிடித்துக் கொண்டு இறுகிய முகத்துடன் நின்று இருக்க ஓரமாய் நின்று அவனை பயத்துடன் பார்த்தவள் அமைதியாக தான் இருந்தாள் எதுவும் பேசவில்லை. ஆனால் ஆரனோ அவளின் கொலுசு சத்தத்தை வைத்து அவளின் வருகையை உணர்ந்து கொண்டவன் "லிசன் மாயா உன்கிட்ட நான் சில விஷயங்களை  தெளிவா சொல்லணும்னு நினைக்கிறேன். நான் சொல்றத கேக்குறதுக்கு உனக்கு இப்போ விருப்பம் இருக்கா இல்லையா?' என்று அவனின் கேள்வியில் இப்பொழுது நான் கூறுவதை நீ கேட்டு தான் ஆக வேண்டும் என்ற கட்டளையும் மறைந்திருந்தது .அதை உணர்ந்து கொண்டவள் "கேட்ப்பேன் சார் சொல்லுங்க" என்றாள் வெள்ளியை குரலில் 

"தட்ஸ் குட் முதல் விஷயம் நீதான் கர்ணனுக்கு அம்மா. அதை எப்பவும் மறந்துடாத" என்று இவன் கூறும் பொழுதே ஆனந்த அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் யட்சிணி ஆனால் அடுத்ததாக அவன் கூறிய வார்த்தைகளில்  அவள் முகம் தொங்கி போனது .



தொடரும்....

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் மக்களே. பாதுகாப்பை தீபாவளியை கொண்டாடுங்க.


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....