பெண் கவிதை 65

"உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் ப்பா" என்று ஆரன் ஆரம்பிக்க தன் மகன் என்ன கூற போகிறான் என்று அவன் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரூரன். அடுத்ததாக ஆரன் கூறிய வார்த்தைகளில் ஒரு நிமிடம் தன் காதல் கேட்டு செய்து உண்மைதானா என்னும் வகையில் விழிகளை விரித்துவிட்டான் ஆரூரன் " டேய் நீ சொல்றது உண்மையா? நிஜமாவே நீ இதுக்கு ஒத்துக்கிட்டியா?" என்று அவன் ஆச்சரியமாக கேட்க அதில் தன் தந்தையை எண்ணி ஒரு சிறு புன்னகை பூத்த ஆரன் "ஆமாப்பா நான் சொல்றது உண்மைதான். எனக்கு ஐ ஆபரேஷன் பண்ணிக்கிறதுல விருப்பம் இருக்குப்பா நீங்க அதுக்கான ப்ராசஸ ஸ்டார்ட் பண்ணுங்க" என்று அழுத்தமான குரலில் ஆரன் கூற தன் மகனை நம்பாமல் பார்த்தான் ஆரூரன் 


"நிஜமாவே சொல்றியா? இவ்வளவு நாள் நான் கெஞ்சிக்கிட்டு இருந்தன் அப்பெல்லாம் நீ வேண்டாம் வேண்டான்னு சொல்லிக்கிட்டு இருந்த. இப்ப நீயே வந்து இப்படி பேசுற என்னடா உண்மைய தான் சொல்றியா இல்ல சும்மா எதாவது விளையாடுறியா?" என்று மீண்டும் ஒருமுறை கேட்டான். ஆனால் உள்ளுக்குள் யட்சிணியின் செயலால் தான் இவன் இவ்வாறு வந்து கேட்கிறான் என்று நன்றாக புரிந்தது 


தன் தந்தையின் சந்தேகத்தை சரி செய்யும் வகையில் "இல்லப்பா எனக்கு உண்மையாவே இப்ப என்னோட பார்வை திரும்ப கிடைக்கணும்னு தோணுது என்னோட பையன் என்ன அப்பான்னு வாய் நிறைய கூப்பிடுறான் இதுவரைக்குமே அவன என்னோட கற்பனையில நான் ஒரு உருவமா வச்சிருக்கேனே தவிர அவன் நிஜத்துல எப்படி இருப்பான்னு எனக்கு தெரியாது அவனை நான் பார்க்கணும் ப்பா அவன் எப்படி இருப்பான் அவனோட உருவம் எப்படி இருக்கும் நீங்க எல்லாரும் சொல்றீங்க அவன் என்ன மாதிரி இருக்கான்னு. உண்மையிலேயே அவன் என்ன மாதிரி தான் இருக்கானா என்று என் கண்ணால நான் ஆசை தீர அவன பாக்கணும் அதுக்காக தான் அப்பா நான் கேட்கிறேன்" என்று ஒரு தந்தையின் உணர்வுபூர்வமான எண்ணத்துடன் அவன் கூற அதைக் கேட்ட ஆரூரனுக்கு நன்றாக புரிந்தது அவன் மனம் 

"நீ சொல்றது எனக்கு புரியுது டா ஒன்னும் பிரச்சனை இல்ல டாக்டர் இப்ப கூட ஆபரேஷன் பண்றதுக்கு தயாராதான் இருக்காங்க நம்ம ஹாஸ்பிடல்ல தான் உனக்கு ஆபரேஷன் நடக்க போகுது அதனால ஒரு பிரச்சினையும் இல்ல நாளைக்கு நாம போய் டாக்டரை மீட் பண்ணலாம் உனக்கு கண் தானம் பண்றதுக்கு கூட தயாரா எத்தனை பேர் இருக்காங்க அப்படின்னு லிஸ்ட் டாக்டர் எடுத்து வச்சிருக்கார் சோ அதனால நம்ம நாளைக்கே போகலாம்" என்று ஆரூருன் கூற அதை கேட்ட பிறகு தான் சற்று நிம்மதியாக இருந்தது ஆரனுக்கு 

கூறியது போலவே மறுநாள் ஆருரன் தன் மகனை அழைத்துக் கொண்டு தனக்கு சொந்தமான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டான் அங்கு மருத்துவர் ஆரனை பரிசோதித்தவர் "இவரோட உடல்நிலை இப்போது ஆபரேஷன் பண்ணா ஏத்துக்கிற நிலைமைல தான் இருக்கு சார் அதனால ஒரு பிரச்சனையும் இல்ல கண் தானம் பண்றவங்களும் ரெடியா தான் இருக்கிறார்கள். ஒருத்தர் விபத்துல ப்ரெய் டெத் ஆகிட்டாரு அவரோட கண்ணு தானம் பண்றதுக்கு அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க முன்வந்து இருக்காங்க அதனால அவரோட கண்ணையே இவருக்கு நம்ம ஆப்ரேஷன் பண்ணி வச்சிடலாம் நீங்க ஆரன் சார எப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும்னு நினைக்கிறீர்களோ சொல்லுங்க" என்று அவர் கேட்க "அதான் டொனேட் பண்றதுக்கு ஆள் ரெடியா இருக்காங்கன்னு சொல்றீங்களே அதனால இன்னிக்கு அட்மிட் பண்ணிடுறேன் என்னடா உனக்கு ஓகே தானே?" என்று ஆரூரன் தன் மகனிடம் ஒரு வித மகிழ்ச்சியுடன் கேட்க "இல்லப்பா ஒர்க் எல்லாம் இருக்கு அதெல்லாம் எப்படி பார்க்கிறது" என்றான் ஆரன். "அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் இல்லனா யுதிகிட்டயும் துரியன் கிட்டயும் கொடுத்தா அவனுங்க பாத்துக்குவானுங்க இதுக்கு மேல தள்ளி போட வேண்டாம் சீக்கிரமா உனக்கு கண் பார்வை வரணும் நீ பழையபடி மாறனும் அதுதான் எங்களுக்கு வேணும்" என்று அவன் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தவாறு ஆருரன் பேச அதற்கு மேல் அவனை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை அவனால் 


"சரிப்பா உங்க விருப்பப்படியே பண்ணிடலாம்" என்று கூற அன்றே மருத்துவமனையில் அவனை அனுமதித்தனர் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரூரன் தொலைபேசி வாயிலாக தகவல் கூறி இருக்க அனைவரும் வந்து விட்டனர் படை எடுத்து மருத்துவமனையை நோக்கி. யட்சிணி கர்ணனை தன் நெஞ்சோடு அணைத்த வண்ணம் ஆரன் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டின் வெளியே அமர்ந்து சோகத்தில் இருந்தாள். அவளுக்கு என்னதான் இந்த அறுவை சிகிச்சை 100 சதவீதம் வெற்றியடைந்து விடும் என்றாலும் அறுவை சிகிச்சை என்று கூறும் பொழுது ஒரு வித பயம் தான் இருந்தது அவளின் நிலை உணர்ந்து கயல்விழி தியூதா இருவரும் அவளை சமாதானம் செய்தனர். "பயப்படாத மா எல்லாமே சக்சஸ் புல்லா முடியும் நம்ம இவ்வளவு நாள் இதுக்காக தானே போராடுனோம் இப்ப அவனே ஒத்துக்கிட்டான் அப்புறம் என்ன? அவனுக்கு கண் பார்வை கிடைக்கப் போகுதுன்னு அதை பத்தி மட்டும் சந்தோஷப்படு" என்று கயல்விழி கூற "இருந்தாலும் பயமா இருக்கு அத்தை" என்றாள் இவள் மெல்லிய குரலில் 


கர்ணன் தூங்கி வழிந்து கொண்டிருக்க அவனை வாங்கி தஷிக்காவிடம் கொடுத்த தியூதா "ஆரூரன் மாமா கிட்ட சொல்லி இங்க பக்கத்துல எதாவது ரூம் அரேஞ்ச் பண்ணி அங்கே இவனை தூங்க வையுங்க இங்கு ஒரே சத்தமா கேட்டுகிட்டு இருக்கு அதனால இவன் தூக்கத்திலிருந்து எழுந்திட போறான்" என்று கூற சரி என்று தலையை அசைத்து ஆரூரனிடம் கேட்டு அருகில் இருந்து மற்றொரு அறையை தயார் செய்து அதில் குழந்தை கர்ணனுடன் நுழைந்து கொண்டனர் விறுஷாலி மற்றும் தஷிகா. இன்னமும் சோகத்தில் தான் அமர்ந்திருந்தாள் யட்சிணி 


கயல்விழி தன் கணவனின் புறம் திரும்பி இவளை சமாதானம் செய்ய இயலவில்லை இன்னும் ரீதியில் தலை அசைக்க அதில் ஒரு பெரும் மூச்சை ஒன்றை விட்ட ஆருரம் "யட்சிணி இங்க பாருமா நீ இப்படி கவலைப்படுவது தேவையில்லாத ஒன்னு. ஆரனுக்கு ஒண்ணுமே ஆகாது டாக்டர் என்கிட்ட தெளிவா எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாரு இதுல ஆரனோட உயிருக்கு ஆபத்து என்பது துளி அளவு கூட கிடையாது புரியுதா? அதனால் தேவை இல்லாம பயந்து உன்னையும் கஷ்டப்படுத்திட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தாதே கொஞ்சம் ரிலாக்ஸா இரு" என்று அவன் கூற அவனின் வார்த்தைகளில் தான் சற்று நம்பிக்கை பெற்று ஓரளவுக்கு தன்னை சமன் செய்து கொண்டான் பெண்ணவள் 

அன்றைய நாள் அனைவருக்கும் ஒரு வித இறுக்கத்திலேயே கழிந்தது மறுநாள் காலையில் 6:00 மணிக்கு அறுவை சிகிச்சை ஆரம்பிக்க இங்கு உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் யட்சிணி கர்ணன் அவளின் நிலை உணர்ந்தானோ என்னவோ அவளிடம் சேட்டை செய்யாமல் அமைதியாக அவள் மடியில் அமர்ந்து மருத்துவமனையில் போவோர் வருவோரை சுற்றி முற்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் தன் தாயின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை இறுகு பிடித்துக் கொண்டு. ஏனெனில் அவனுக்கு விளையாட்டே அவள் கழுத்தில் இருக்கும் தாலியுடன் விளையாடுவது தான்.

அனைவரும் ஒருவித பதட்டத்தில் இருக்க  இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மருத்துவர் அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து மருத்துவர் வெளியே வர அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டனர். அனைவரையும் ஒரு புன்சிரிப்புடன் பார்த்தவர் "சக்சஸ்ஃபுல்லா ஆபரேஷன் முடிஞ்சிடுச்சு அவருக்கு கண் பார்வை திரும்ப கிடைச்சிடுச்சு" என்று அவர் கூற அதைக் கேட்டு அனைவருக்கும் மனதிற்குள் நிம்மதி பிறந்தது மட்டுமில்லாமல் மகிழ்ச்சியும் ஒட்டிக்கொண்டது. தேங்க்யூ டாக்டர் தேங்க்யூ சோ மச் உங்களுடைய இந்த உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம் "என்று உணர்வு பூர்வமாக ஆருத்ரன் மருத்துவரிடம் பேச அதை ஏற்றுக் கொண்டவர் "ஒன் வீக் எழுச்சி கண் கட்ட பிரிக்கலாம் அதுக்குள்ள காயம் எல்லாம் ஓரளவுக்கு ஆறிடும் அதன் பிறகு ஒரு நார்மல் செக்கப் பண்ணிட்டா நீங்க அதுக்கப்புறம் அவர வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் அதுவரைக்கும் அவர் ஹாஸ்பிடல்லே இருக்கட்டும்" என்று மருத்துவர் கூற சரி என்று தலை அசைத்து அதை ஏற்றுக் கொண்டனர் அனைவரும் 


மருத்துவர் கூறியதை முழுதாக கேட்ட பின்பு தான் போன உயிரை திரும்பி வந்தது போல் இருந்தது யட்சிணிக்கு. அவள் மனதிற்குள் பூத்த மகிழ்ச்சியில் கர்ணனை இறுக்கமாய் அனைத்து ஆனந்த கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க அவளின் நிலை உணர்ந்து அவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் தியூதா


ஒரு வாரம் எப்படி சென்றது என்று தெரியவில்லை இந்த ஒரு வாரத்தில் ஆரனுடன் அதிகமாக இருந்தது என்னவோ ஆருத்ரன் மற்றும் ஆருரன் மட்டும்தான் பெண்கள் அனைவரும் ஆரனை தொந்தரவு செய்யவில்லை அவ்வப்போது அவனை அருகில் இருந்து பார்த்துக் கொள்வது அவன் தாய் கயல் விழியும் தியூதாவும் தான். யட்சிணி அறைக்குள் வந்து அவனை பார்ப்பவள் தூரத்திலேயே நின்று அவனை பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விடுவாள். அவளுக்கு இப்போது உள்ளுக்குள் ஒரு பயம் பிறந்தது 


ஒருவேளை தன்னை கண்டவுடன் அவன் எதிர்வினை என்னவாக இருக்கும் நான் இப்படித்தான் இருப்பேன் என்று அவன் மனதில் ஒரு உருவத்தை வரைந்து வைத்திருக்க அந்த உருவத்திற்கு எதிர்மறாக நான் இருந்தால் அவன் என்னை வெறுத்து விடுவானோ என்று பயத்தில் அவள் அவனிடம் அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை இதை எல்லாம் ஆரன் மனதிற்குள் குறித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை அப்பொழுது அறியவில்லை பெண்ணவள் 

கர்ணனும் அதிகமாக சேட்டை செய்வான் என்பதால் எங்கே ஆரனிடம் அவனை விட்டால் கண்ணில் உள்ள காயத்தில் ஏதாவது இவன் விளையாட்டுத்தனமாக தன் கரம் கொண்டு காயப்படுத்தி விடப் போகிறானோ என்ற பயத்தில் அவனையும் அவ்வளவாக ஆரனிடம் கொடுக்கவில்லை ஆனால் ஆரன் தன் மகனின் அருகாமை இல்லாமல் மிகவும் தவித்து போய்விட்டான் இந்த ஒரு வாரத்தில். அது மட்டும் இன்றி அவனுக்கு தன் மகனின் முகத்தை காண வேண்டும் என்று உள்ளுக்குள் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. அவனுக்காக தானே இந்த சிகிச்சை செய்து கொள்கிறான் இல்லை என்றால் நற்பவியின் நினைவில் தன் இருட்டு உலகத்திலேயே வாழ்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு இருந்தது. ஆனால் என்று கர்ணன் அவனை அப்பா என்று அழைத்தானோ அப்பொழுதே அவன் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற துடிதுடிப்பு உள்ளுக்குள் வந்து ஒட்டிக் கொண்டதே அவன் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான முக்கிய காரணமாக இருந்தது


அவன் கண்கட்டை பிரிக்க போகும் நாளும் வந்துவிட்டது. அனைவரும் அந்த சந்தோஷத்தை எண்ணி அவன் முன்பு கூடி இருக்க அங்கு யட்சிணி இல்லை.

அவள் எங்கே சென்றாள்? 

தொடரும்....


Comments

Popular posts from this blog

எனக்கெனவே நீ பிறந்தாய் 1

எனக்கெனவே நீ பிறந்தாய் எபிலாக்

எனக்கெனவே நீ பிறந்தாய் டீசர்.....