பெண்கவிதை 62
இரவு உணவு வேலையின் பொழுது அனைவரும் டைனிங் டேபிள் அருகே அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க அப்பொழுதுதான் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆரன் அவன் பின்னே யுதியும் வர "என்ன ரெண்டு பேரும் இவ்வளவு லேட்டா வரீங்க ஏன்டா யுதி கல்யாண மாப்பிள்ளை நீதான். இப்படி அவன் கூட சேர்ந்து நீயும் வேலை பாக்குறேன் அது இதுன்னு ஊர சுத்திட்டு இருக்க கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்கணும்னு உனக்கு தெரியாதா? கல்யாண நெருக்கத்தில் இப்படி எல்லாம் வேலை இழுத்து வச்சு செஞ்சுட்டு இருக்காதடா "என்று உணவு உண்டு கொண்டே உள்ளே வந்தவர்களிடம் ஆரூரனுக்கு கூற "இல்ல மாமா ஆரன் மாமாவுக்கு கூட துணைக்கு தான் போன. மத்தபடி மாமா எனக்கு எந்த வேலையும் வைக்கல தனியா அவரை எப்படி விடுறது" என்று அவன் கூறியவரே சோர்வாக அவன் அருகே இருந்த இருக்கையில் அமர "ஆமா நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் அவனுக்கு துணையா நீ போறியா? ஏன்டா அவனால எல்லா வேலையும் தனியா பார்க்க முடியாதா?" என்று கயல்விழி கூற அதைக் கேட்டு அனைவரும் வாய்விட்டு சிரித்து விட்டனர்
தான் மொக்கை வாங்கியதை உணர்ந்து அனைவரையும் முறைத்தவன் "ஆமா நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தான். பேசாமல் எனக்கும் தக்ஷிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு பதிலா எனக்கும் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுங்க" என்று யுதி கூற அதைக் கேட்டு அவன் தலையில் அடித்தான் ஆரன். "அய்யோ மாமா ஏன் இப்படி?" என்று தலையில் தேய்த்துகொண்டு பாவமாக யுதிஷ்டிரன் கேட்க "என்ன பேசுற செருப்பால அடிப்பேன் நாயே" என்றான் ஆரலலன் முகத்தை சுழித்துக் கொண்டு. "ஐயோ நான் சும்மாதான் சொன்னேன் உடனே நீங்க இமேஜினேஷனுக்கு போவாதீங்க எனக்கு உங்களை எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு உங்க கூட வாழ முடியாது உங்கள மாதிரி ஒரு ஹிட்லர் கிட்ட வாழ்றதெல்லாம் ரொம்ப கஷ்டம்" என்று யூதி கூற அதில் அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தான் ஆணவன்
"அய்யோ என்னை யாராவது காப்பாத்துங்க கல்யாணம் பையனை இவரை அடிச்சே சாவடிச்சிருவார் போல அப்புறம் மனவறைல உட்காரும்போது இவர் அடிக்கிற அடியில முகம் கை கால் எல்லாம் வீங்கி தான் நான் உட்காருவேன்" என்று யுதி ஒரு புறம் கத்திக் கூப்பாடு போட அவன் தலையில் கொட்டிய மான்வித்ரா "அவன்கிட்ட நீ எதுக்குடா வம்புக்கு போற இந்தா உனக்கு டின்னர் எடுத்து வைக்கிறேன் போய் முகம் கையெல்லாம் நல்லா அலம்பிட்டு வா கரிகாலா நீயும் போப்பா" என்று மான்வித்ரா கூற சரி என்று கூறிவிட்டு முகம் கைகளை நன்றாக கழுவிக் கொண்டு வந்து அமர்ந்தான்
"இங்க என் பக்கத்தில் உட்காருடா" என்று தன் அருகே இருந்து இருக்கையை தட்டி ஆரூரன் தன் மகனை தன் அருகே அழைக்க அவன் அருகே சென்ற அமர்ந்தான் ஆனவன். "யட்சிணி அவனுக்கு பரிமாறு தம்பிய என்கிட்ட கொடு அவன் சாப்பிட்டான்ல இப்ப தூங்குற நேரம் தான நான் வந்து தூங்க வைக்கிறேன்" என்று கூறியவாறு அவள் இடுப்பில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கர்ணனை கயல்விழி வாங்க முற்பட 'அவன் வேற யார்கிட்டயும் தூங்க மாட்டான் அத்தை என்கிட்ட மட்டும் தான் தூங்குவான் நானே வச்சிக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று கூறியவாறு அவனை இடுப்பில் அமர்த்திக் கொண்டு ஆரானுக்கு உணவை பரிமாற ஆரம்பித்தாள் யட்சிணி
அவளின் தாய் பாசத்தில் அனைவரும் மெய் சிலிர்த்து அவளை பார்க்க தன் தாயின் இடுப்பில் அமர்ந்து கொண்டு தந்தையின் தோளில் காலால் மிதித்து விளையாடிக் கொண்டிருந்தான் கர்ணன். "எதுக்குடா உதைக்கிற நான் இப்போ தான் சாப்பிட போறேன் நீ ஒதைக்கிறதுல சாப்பாடு எல்லாம் கீழே சிந்துரும் போல அமைதியா இரு" என்று ஆரன் தன் மகனை அதட்ட அதில் மேலும் பால் பற்களை காட்டி வாயைத் திறந்து இளித்துவிட்டு மீண்டும் அவன் தோளில் எத்தினான் குழந்தை. "ஏண்டா கண்ணா உன் அப்பா மேல உனக்கு எவ்வளவு நாள் கோபம். இப்படி அவனை உதைத்து அதை வெளிப்படுத்துற?" என்று ஆருத்ரன் ஒரு புறம் கேலி செய்ய அதில் விழிகளை உருட்டியவன் "மாயா அவனை என்கிட்ட கொடு அவன் எதுக்காக இப்படி பண்ணிட்டு இருக்கான்னு தெரியல ஒருவேளை என்கிட்ட வரணும்னு தான் இப்படி துடிக்கிறானோ என்னவோ. அவனை மடியில உட்கார வை " என்று யட்சிணி இடம் கூற சரி என்று தலை அசைத்து விட்டு அவனை ஆரன் மடியில் அமர வைத்தாள் யட்சிணி தன் தந்தையின் மடிக்க வந்தவுடன் குதித்து ஆட்டம் போட ஆரம்பித்தான் கர்ணன்
"டேய் அமைதியா உட்காருடா இல்ல காதை திருகி வச்சிடுவன் ஒழுங்கா இரு" என்று தன் மகனை அதட்டினான். ஆனால் அதை எல்லாம் அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை கர்ணன். அவனின் சட்டை பட்டனை பிடித்து சோதனை செய்ய ஆரம்பித்து விட்டான் அந்த குட்டி விஞ்ஞானி
அனைவரும் தந்தை மகனின் செயல்களை எல்லாம் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்க முதலில் தன் மகனுக்கு சிறிதாக உணவை ஆரன் ஊட்டம் முற்பட அவனோ விழிகளை உருட்டி அவனை பார்த்துவிட்டு தன் தந்தை ஊட்டிய உணவை உண்ண தொடங்கினான். அதில் வாயில் கைவைத்து அதிர்ச்சியாக அவனைப் பார்த்த யட்சிணி "ஏன்டா இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் சாப்பாடு ஊட்டுவதற்கு ட்ரை பண்ணும்போது எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ண நேத்து இருந்த மாதிரி இன்னைக்கு இல்லாம பயங்கர சேட்டை பண்ணிட்டு உங்க அப்பா ஊட்டுன உடனே ஒழுங்கா சாப்பிடுறியா சரியான ஆளுதான் நீ" என்றாள் தன் மகனின் கன்னத்தை செல்லமாய் கிள்ளியவாறு யட்சினி
"சரி தான் என்னமோ சொல்லுவ உன் புள்ள ரொம்ப சமத்து ரொம்ப அமைதினு . இப்போ அதுக்கு எல்லாம் ஆப்பு வைக்கிற மாதிரி சேட்டை பண்ண ஆரம்பிச்சுட்டானா?" என்று சிரித்தவாறு கூறிய ஆரன் கொஞ்சம் கொஞ்சமாக உணவை தன் மகனுக்கும் ஊட்டி விட்டு தானும் உண்டு கொண்டிருக்க அனைவருக்கும் இவர்கள் இப்படி குடும்பமாக மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு மனம் நிறைந்தது. உணவை உண்டவாறு ஆரூரனிடம் பேச தொடங்கினான் ஆரன் "அப்பா நாளைக்கு ஒரு முக்கியமான விஷயமா நான் விழுப்புரம் வரைக்கும் போக போறேன் கூடவே யட்சினியையும் கர்ணனையும் கூட்டிட்டு போற" என்று அவன் கூற "விழுப்புரத்துக்கா? அங்கே எதுக்குடா?" என்றான் புரியாமல் ஆரூரன். "நவிய ரிஸ்க்யூவ் பண்ணி காப்பாற்ற ட்ரை பண்ண ஞானப்பிரகாசம் இருக்காருல்ல அவர்தான் அவரோட ஊருக்கு வர சொல்லி இருக்காரு அதனால தான் அங்க போறேன் போகும்போது கர்ணனையும் யட்சிணியையும் அப்படியே கூட்டிட்டு போலாம்னு தோணுச்சு அதனாலதான் போறேன்னு சொல்றேன்" என்று அவன் கூற "அங்கு எதுக்குடா அவர் எதுக்கு உன்னை வர சொல்லி இருக்காரு?" என்று புரியாமல் கேட்டான் ஆரூரன்
"தெரியலப்பா ஆனா வாங்கன்னு சொல்லி இருக்காரு என்ன விஷயம்னு தெரியல என்னன்னு போய் பார்த்து பேசிட்டு வரோம் கல்யாண வேலை முக்காவாசி முடிஞ்சிடுச்சு இனி என்னென்ன எல்லாம் இன்னும் செய்யணும் என்பதை நான் உங்களுக்கு அப்டேட் பண்ணிட்டேன் நீங்க அந்த வேலைய மட்டும் பாத்துக்கோங்க நாங்க போயிட்டு வரதுக்கு எப்படியும் ரெண்டு நாள் ஆகிடும்னு நினைக்கிறேன் அதுவரைக்கும் மட்டும் கொஞ்சம் வேலை எல்லாம் பார்த்துக்கோங்க இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு அதுக்குள்ள எல்லா வேலையும் முடித்து விடனும்" என்று ஆரன் கூற "அதான் நீ முக்காவாசி முடிச்சிட்டியேடா இன்னும் பேலன்ஸ் இருக்கிறது கொஞ்சம் மட்டும்தான் அது என்ன என்கிறது எங்களுக்கே தெரியும் நாங்க பாத்துக்கிறோம் நீ எந்த டென்ஷனும் இல்லாம அங்க போயிட்டு வா எப்ப கிளம்புற?" என்று ஆருத்ரன் கேட்க "நாளைக்கு காலைல தான் சித்தப்பா கிளம்புறேன் அங்க போய் ரீச் ஆவதற்கு எப்படியும் ஆப்டர்நூன் இல்லனா ஈவினிங் கூட ஆகிடும் அதன் பிறகு என்ன விஷயம்னு நான் உங்களுக்கு கால் பண்ணி சொல்றேன்" என்று ஆரன் கூற சரி என்று தலையசைத்து ஏற்றுக் கொண்டனர் அனைவரும்
மறுநாள் காலையில் கூறியது போல தங்கள் பயணத்தை ஞான பிரகாசத்தின் ஊரை நோக்கி தொடங்கினர் ஆரன் யட்சிணி மற்றும் கர்ணன். செல்லும் வழி எங்கும் விழி விரித்த அனைத்தையும் வேடிக்கை பார்த்தவாறு தன் தாயின் மடியில் ஜம் என்று அமர்ந்திருந்தான் கர்ணன் காரை இயக்கிக் கொண்டிருந் துரியன் பார்த்து சிரித்து கொண்டிருந்தான். யுதி நானும் கூட வருகிறேன் என்று கூறியிருக்க அவனை வேண்டாம் என்று தடுத்து விட்டான். திருமண நேரத்தில் அவனுக்கு அலைச்சல் வேண்டாம் என்று எண்ணிக்கொண்டான்
"ஒன்னும் பிரச்சனை இல்ல நானே பார்த்துக்குறேன். துரியனை கூட்டிட்டு போற்றன் நீ வீட்ல ரெஸ்ட் எடு புரியுதா?" என்று கண்டிப்புடன் கூறி விட அவன் பேச்சை மீறி எதுவும் செய்ய இயலவில்லை சரி என்று தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டான்
துரியன் காரை இயக்கிக் கொண்டிருக்க முன் கண்ணாடி வழியாக கர்ணனைப் பார்த்தவன் "பார்த்தியா நல்லா ராஜா பகவத் மாதிரி உட்கார்ந்து இருக்கிறத. குட்டி பையனுக்கு யட்சிணிக்கும் கூட நல்ல அட்டாச்மென்ட் ஆகிடுச்சு சார்" என்று துரியன் சிரிப்புடன் கூற அதை உணர்ந்தும் மென்மையாக சிரித்து ஆரன் "ஆமாம் அம்மாவும் பிள்ளையும் சேர்ந்துக்கிட்டு பண்ற அலப்பறை எல்லாம் தாங்கவே முடியல்லை" என்றான் வேண்டுமென்றே யட்சிணியை வெறுப்பேற்றும் நோக்கில்
உங்களுக்கு பொறாம நானும் என் பையனும் இவ்ளோ க்ளோசா இருக்கிறதை பார்த்து. நீங்களும் வேணும்னா இவன் கூட க்ளோஸ் ஆகுங்களேன் யார் வேணான்னு சொன்னது" என்று யட்சிணி கூற "ஆல்ரெடி அவன் என் கிட்ட குளோசா தான் மா இருக்கான். நீ அதை கவனிக்கறது இல்லன்னு சொல்லு" என்றான் ஆரனும் பதிலுக்கு. கணவன் மனைவி இருவரின் சம்பாஷனைகள் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துரியனுக்கு அவர்கள் இருவருக்கும் இடையில் இப்பொழுது ஒரு சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் நன்றாக புரிந்தது. இது இப்படியே நிலைக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான் இறைவனிடம்.
நீண்ட நேர பயணத்திற்கு பிறகு "உனக்கு ரெஸ்ட் எடுக்கணும்னா கொஞ்ச நேரம் எங்கேயாவது வண்டியை நிறுத்திக்கிறியா துரியா? இவ்வளவு தூரம் டிரைவ் பண்றது கஷ்டமா இருக்கும்" என்று ஆரன் கூற "ஒன்னும் பிரச்சனை இல்ல சார் நீங்க சொன்ன இடத்துக்கு போக இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு நம்ம அங்கேயே போயிடலாம் நீங்க கரெக்டா அட்ரஸ் மட்டும் எனக்கு சொல்லுங்க" என்று துரியன் கூற ஞானப்பிரகாசம் அனுப்பிய முகவரியை துரியனிடம் சரியாக கூறினான் ஆரன். அதை வைத்து சரியாக ஞான பிரகாசத்தின் ஆசிரமத்திற்கு முன்பு வந்து வண்டியை நிறுத்தி விட்டான் ஆனவன்
இவர்களின் வருகைக்காகவே காத்துக்கொண்டிருந்தார் போல ஞான பிரகாசம். வேகமாய் வெளியே ஓடி வந்தவர் "வாங்க வாங்க தம்பி உள்ள வாங்க உங்களுக்காக தான் காத்துகிட்டு இருந்தேன்" என்றார் மகிழ்ச்சியாக . அவரின் குரலை வைத்தே அவரை தெரிந்து கொண்ட ஆரன் "வணக்கம் சார் எப்படி இருக்கீங்க?" என்று ஆரன் வினவ "எனக்கு என்ன நல்லா இருக்கேன் தம்பி" என்றவர் குழந்தையை காண பரிதவித்துப் போனார் ஒன்றரை வருடங்கள் அவனை தன் கரங்களிலேயே வைத்து வளர்த்து விட்டு திடீரென்று ஆரனிடம் அவனை கொடுத்துவிட்டு வந்ததிலிருந்து மனமே சரியில்லை அவருக்கு. இப்பொழுது மீண்டும் குழந்தையை கொஞ்ச வேண்டும் என்று அவர் மனம் ஆர்ப்பரிக்க அவரது நிலை உணர்ந்த யட்சிணி கர்ணனை தூக்கிக்கொண்டு வந்து அவர் கையில் திணிக்க குழந்தையை வாங்கி கண்ணம் கண்ணம்மாய் முத்தமிட்டு கண்ணீர் விட்டு கொஞ்ச தள்ளி விட்டார் பாசத்துடன். இதையெல்லாம் ஒரு வித நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் துரியன் மற்றும் யட்சிணி. கண்களால் பார்க்கவில்லை என்றாலும் உணர்வால் அதை உணர்ந்து கொண்டிருந்தான் ஆரன்.
தொடரும்...
Comments
Post a Comment