பார்வை ஒன்றே போதுமே 39
இந்த வருஷத்துக்கான யாங் பிசினஸ் மேன் அவார்ட் எனக்கு அனோவ்ன்ஸ் பன்னிருகாங்க. நாளைக்கு ஈவினிங் அவார்ட் ஃபங்க்ஷன் நடக்குது. நீ வந்தா நல்லா இருக்கும். உனக்கு விருப்பம் இருந்தா வரலாம் என்று சாலையில் கவனத்தை வைத்து கொண்டே அவன் கூற அவன் கூறியதை கேட்டவள் எந்த பதிலும் கூறவில்லை. அதில் ஒரு பெரு மூச்சு விட்டவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினான். வீட்டின் உள் முதலில் துருவன் நுழைய அவன் பின்னே தீராவும் வந்தாள். ஆதிரன் பிசினஸ் விஷயமாக தொழில் துறை நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டிருக்க அபியோ மொபைலில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தான். அவன் மண்டையில் ஒரு கொட்டு கொட்டினான் துருவன். யாருடா அது வெண்ணெய் என்று தலையை தேய்த்து கொண்டே திரும்பி பார்க்க துருவன் தான் அவனை முறைத்து கொண்டு இருந்தான். ஏண்டா கொட்டுன பனை மரம் என்று அபியும் முறைத்து கொண்டே கேட்க இது தான் நீ வெளிய போற லட்சணமா இந்து நக்கலாக துருவன் கேட்க அயோயோ கரெக்ட்டா கேக்குறானே. இப்போ என்ன சொல்லி சமாளிக்குறதுன்னு தெரியலையே என்று திரு திருவென முழித்தவாறே அவன் யோசிக்க அவன் எதிரே உள்ள சோபாவில் அமர்ந்து அவனையே குரு குருவென பார்த்த...