காவலனோ காதலனோ 54
காபி கப்புகள் அடங்கிய ட்ரேவை எடுத்துக்கொண்டு பெண்கள் மூவரும் ஒருங்கிக் கொண்டிருந்த அறையின் முன்பு சென்று நின்ற சைத்தாலி அரையின் கதவை தட்ட செல்லும் சமயம் தானாகவே கதவு திறந்து கொண்டது "கதவை கூட லாக் பண்ணாமையா தூங்குறாங்க" தனக்குள்ளே நினைத்துக் கொண்ட சைத்தாலி மெல்ல அறைக்குள் நுழைய அங்கு ஒருவர் மேல் மற்றொருவர் கால் கைகளை போட்டுக்கொண்டு வாயைப் பிளந்து பப்பரப்பாவென்று உறங்கிக் கொண்டிருந்தனர் பெண்கள் மூவரும். அவர்களின் துங்கும் நிலையை கண்ட சைத்தாலிக்கு சிரிப்பே வந்து விட்டது அந்த அளவிற்கு மூவரும் மூன்று பொசிஷனில் உறங்கிக் கொண்டிருந்தனர். "ஷப்பா பொண்ணுங்க மாதிரி இப்படி தூங்குகிறாங்க. இவங்களை எழுப்புறது ரொம்ப கஷ்டமான விஷயம் போலவே" என்ற தனக்குள்ளே நினைத்துக் கொண்டு சைத்தாலி தட்டை டேபிள் மீது வைத்து விட்டு கட்டிகளின் ஓரம் உறங்கிக் கொண்டிருந்த ஆர்த்தியை சென்று மெல்ல எழுப்ப அவளோ ம்மா இன்னும் அஞ்சு நிமிஷம் அப்புறம் எழுதுகிறேன்" என்று முனங்கியவாறே மீண்டும் தூங்க "அடியே எழுந்துருடி" என்று அவளை போட்டு உலுக்கினாள் சைத்தாலி அவளின் குரலை கேட்டு அடித்து பிடித்து எழுந்த...