எனக்கெனவே நீ பிறந்தாய் 11
இங்கு ஒரு பாழடைந்த குடோனில் உடல் முழுவதும் ரத்தம் வழியும் நிலையில் ஒரு தூணில் கட்டப்பட்டிருந்தான் ஒருவன். அப்பொழுது உள்ளே நுழைந்த ஒரு உருவம் அவனின் முன்னாள் போட பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தது.சுற்றி இருந்த கார்ட்ஸில் ஒருவனிடம் கண்ணை காட்ட கட்டப்பட்டிருந்தவன் மீது ஐஸ் கட்டிகள் நிறைந்த குளிர்ந்த நீர் ஊற்றப்பட்டது. தன் மேல் நீர் விழுந்தவுடன் மூச்சித்தினறி கண்விழித்தான் விஷ்வா. கண்கள் மங்கலாக தெரிய தன் எதிரில் இருந்த உருவத்தை பார்க்க முயற்சி செய்துகொண்டிருந்தான். என்ன மிஸ்டர் விஷ்வா. எப்டி இருக்கீங்க என்று அந்த உருவம் வினவ அது யாரென தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் விஷ்வா. ஏய் யார் நீ. எதுக்கு என்ன கடத்திட்டு வந்துருங்க. என்னோட அப்பாக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது உன்ன நாசம் பண்ணிடுவாறு என்று கத்தினான் விஷ்வா. அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த யதர்வ் அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு அவன் முகத்தில் ஓங்கி குத்தினான்.அதில் அவன் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. அவன் வலியில் அலற அட என்ன கமிஷனர் சார். டக்குனு இப்டி பண்ணிடீங்க. அதான் நா பேசிட்டு இருக்கேன்ல. நீங்க கொஞ்சம் அம...