பெண் கவிதை 40
ஆரன் மொத்தமாய் அவளிடம் கூறி முடிக்க அதை கேட்ட யட்சிணிக்கு மனம் கனத்து போனது அதிலும் தன் கணவன் வேறொரு பெண்ணுடன் ஊனாய் உருகி அவளுடன் காதலில் கசிந்துருக்கி வாழ்ந்துள்ளான் என்பதை காதால் கேட்க கேட்க அவளுக்கு மனம் ரணமாய் வலித்தது. கலங்கிய கண்களை மறைக்க பெரும் பாடு பட்டு மனதில் உள்ள ரணத்தின் விளைவால் வெளியே கேவலாய் வந்து அழுகையை கூட அடக்கிக் கொண்டு அமைதியாக நின்று இருந்தாள் யட்சிணி. ஆரன் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் "அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் காதலோட தான் இணைந்தோம் மாயா கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க தப்பு பண்றோம்னு எங்க மனசுல ஒரு துளி கூட என்ன வரவே இல்ல ஏன்னா நான் கண்டிப்பா அவளை கல்யாணம் பண்ணிக்குவேன் என்ற நம்பிக்கை எனக்கும் இருந்தது அவளுக்கும் இருந்தது. ஆனா அதுதான் அவளை கடைசியாக பார்க்க போற நாள்ன் தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா நான் அவளை விட்டுட்டு வந்து இருக்கவே மாட்டேன் என்கூடவே அவளை எங்க கூட்டிட்டு வந்து இருப்பேன் அதுதான் நான் பண்ண மிகப்பெரிய தப்பு" என்று கூறும் பொழுதே அவன் குரலில் வேதனை அப்பட்டமாய் வெளிப்பட்டது "இவன்தான் உங்க பையனும் உங்களுக்கு எப்படி த...