பெண் கவிதை 48
"பெரிய மாமா தம்பிய தோட்டத்துக்கு கூட்டிட்டு போயிருக்காரு" என்று யட்சிணி மெல்லிய குரலில் கூற "பெரிய மாமாவா?" புருவம் சுருக்கினான் அவள் கூறியதை கேட்டு ஆரன் "ஆமா நான் தான் என் பேரனை தூக்கிட்டு போனேன் இதுல என்ன தப்பு இருக்கு?" என்று கூறியவரே குழந்தையை தன் கரங்களில் ஏந்தியவாறு வீட்டிற்குள் மீண்டும் நுழைந்தான் ஆரூரன். தன் தந்தையின் குரலில் அவன் தான் தன் மகனை வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்தவன் எதுவும் கேள்வி கேட்டுக்கொள்ளவில்லை அதற்கு மேல். அவன் அருகே இருந்த இருக்கையில் தன் பேரனுடன் வந்து அமர்ந்த ஆருரன் அவனை தன் மடியில் அமர வைத்துக் கொண்டு "இவனுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது கொடுத்தீங்களா?" என்றான் அவன் தலைமுடியை சரி செய்த வண்ணம். குழந்தையோ தன் தந்தையை கண்டவுடன் அவனிடம் தாவ முயற்சி செய்து கொண்டிருக்க "இருடா டேய் இவ்வளவு நேரம் என்கிட்ட தானே இருந்த உன் அப்பனை பார்த்த உடனே அவன் கிட்ட தாவுற கொஞ்ச நேரம் என் கூட இரு அப்புறம் உங்க அப்பாகிட்ட போ" என்று குழந்தையை பார்த்து ஆரூரன் கூற அவன் என்ன கூறுகிறான் என்று தெரியாமல் மலங்க மலங்க அவனைப் பார்த்து விழித்...