பெண்கவிதை 55
இரவு தாமதமாக வீட்டிற்குள் நுழைந்த ஆண்களை ஹால் சோபாவில் அமர்ந்திருந்த கயல்விழி தான் வரவேற்றாள். கைகளை கட்டிக்கொண்டு அவள் அமைதியாக ஹால் சோபாவில் தலை சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருக்க தன் மனைவியை இந்நேரம் எங்கு எதிர்பாராத ஆரூரன் அவள் அருகே சென்றவன் "என்னாச்சு விழி இவ்வளவு நேரம் வரைக்கும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அவள் அருகே சென்று அவள் தோள்மேல் தன் கரம் வைத்து கேட்க அவன் குரல் கேட்டு வேகமாய் கண் விழித்தவள் அப்பொழுதுதான் அனைத்து ஆண்களையும் கண்டாள் "என்ன எல்லாரும் இவ்ளோ லேட்டா வீட்டுக்கு வரீங்க நீங்க வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன் காலையில பங்க்ஷன் முடிஞ்சு அப்படியே வெளிய கிளம்பினவங்க இப்பதான் வரீங்க எங்க போயிட்டு வரீங்க எல்லாரும்?" என்று அவள் கோபமாய் கேட்க அதில் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அனைவரும் தடுமாறி நிற்க ஆரூரன் மட்டுமே தன் மனைவியை கையாளும் வித்தையை அறிந்தவன் என்பதால் "அது ஒன்னும் இல்லம்மா ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங் நாங்க எல்லாருமே அதுல கலந்துக்க வேண்டிய சிச்சுவேஷன். ஏன்னா நம்ம கம்பெனியோட எம்டி நான் கண்டிப்பா இருக...