காவலனோ காதலனோ 10
மிஸ்டர் ராவணன் நான் ரணதீர் வர்மன் பேசுறேன் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் நீங்க எப்ப ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொல்றீங்களா உங்களை நான் மீட் பண்ணனும்... என்று வர்மன் தன் கணீர் குரலில் கேட்க ராவணன் சிறிது நேரம் யோசித்தவன் உங்களுக்கு எந்த இடம் கன்வினியன்ட்டா இருக்கும்ன்னு சொல்லுங்க அங்க ரெண்டு பேருமே மீட் பண்ணலாம் ....என்றான் ஆளுமை குரலில் ராவணன். அவனின் ஆளுமையை வைத்தே வர்மனுக்கு ஆத்திரேயனின் குணம் எப்படி இருக்கும் என்று நன்றாக புரிந்து விட இதழ் ஓரம் அதிசயமாக ஒரு சிரிப்பை வெளியிட்டவன் இன்னும் 10 மினிட்ஸ்ல பிலேஸை பிக்ஸ் பண்ணிட்டு உங்களுக்கு லொகேஷன் ஷேர் பண்றேன்.... என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் வர்மன் ராவணன் காதில் இருந்து மொபைலை எடுத்தவுடன் யாருடா அது... என்று கேட்டான் சைத்ரன். நீ சொன்னியே அந்த பெரிய ஆளு ரணதீர் வர்மன் அவர்தான் கால் பண்ணி இருந்தாரு.... என்று சாதாரணமாக ராவணன் கூறிவிட்டு காபியை மீண்டும் மீண்டும் அருந்த துவங்க அவன் கூறியதை கேட்டு விழி விரித்து அவனைப் பார்த்தான் சைத்ரன்..என்னடா இவ்ளோ சாதாரணமா சொல்ற அவருக்கு என்ன பிரச்சனை போயிட்டு இருக்குனு உனக்கு தெரியும் தானே... இந்த மா...