பெண் கவிதை 65
"உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் ப்பா" என்று ஆரன் ஆரம்பிக்க தன் மகன் என்ன கூற போகிறான் என்று அவன் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரூரன். அடுத்ததாக ஆரன் கூறிய வார்த்தைகளில் ஒரு நிமிடம் தன் காதல் கேட்டு செய்து உண்மைதானா என்னும் வகையில் விழிகளை விரித்துவிட்டான் ஆரூரன் " டேய் நீ சொல்றது உண்மையா? நிஜமாவே நீ இதுக்கு ஒத்துக்கிட்டியா?" என்று அவன் ஆச்சரியமாக கேட்க அதில் தன் தந்தையை எண்ணி ஒரு சிறு புன்னகை பூத்த ஆரன் "ஆமாப்பா நான் சொல்றது உண்மைதான். எனக்கு ஐ ஆபரேஷன் பண்ணிக்கிறதுல விருப்பம் இருக்குப்பா நீங்க அதுக்கான ப்ராசஸ ஸ்டார்ட் பண்ணுங்க" என்று அழுத்தமான குரலில் ஆரன் கூற தன் மகனை நம்பாமல் பார்த்தான் ஆரூரன் "நிஜமாவே சொல்றியா? இவ்வளவு நாள் நான் கெஞ்சிக்கிட்டு இருந்தன் அப்பெல்லாம் நீ வேண்டாம் வேண்டான்னு சொல்லிக்கிட்டு இருந்த. இப்ப நீயே வந்து இப்படி பேசுற என்னடா உண்மைய தான் சொல்றியா இல்ல சும்மா எதாவது விளையாடுறியா?" என்று மீண்டும் ஒருமுறை கேட்டான். ஆனால் உள்ளுக்குள் யட்சிணியின் செயலால் தான் இவன் இவ்வாறு வந்து கேட்கிறான் என்று நன்றாக புரிந்தது தன் தந்த...